பொதுமக்கள் மீதான தற்போதைய பொருளாதார இன்னல்களின் சுமையினைத் இலகுபடுத்துவதற்கு அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
வங்கித்தொழில் முறைமையில் காணப்படும் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவான இன்னல்களுக்கும் பங்களிக்கின்ற முக்கிய காரணியாக விளங்குகின்றது. அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை பற்றாக்குறையானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினையும் பாதித்துள்ளது. வங்கித்தொழில் முறைமையில் போதுமான வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையினை உறுதிசெய்யும் பொருட்டுஇ ஏற்றுமதி வருவாய்கள் மீதான ஒப்புவித்தல் தேவைப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி விதிக்கவேண்டியிருந்தது. மேலும்இ சில இறக்குமதிகள் மற்றும் கொடுப்பனவு நியதிகள் மீதான கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் எல்லைத் தேவைப்பாடுகளை அறிமுகப்படுத்தல் போன்ற வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்களை ஊக்கமிழக்கச் செய்கின்ற அதேவேளை கண்காணிக்கப்படாத சந்தைக;டாக பணம் அனுப்படுவதை தவிர்த்து வங்கித்தொழில் முறைமையூடாக வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கினாலும் வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இவ்வொழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின்; வெற்றியும் உத்தேசிக்கப்பட்ட பெறுபேறுகளை அடைந்துகொள்வதற்கான இயலுமையும் வர்த்தக சமூகம் மற்றும் வங்கித்தொழில் முறைமை என்பவற்றிலிருந்து கிடைக்கும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. எவ்வாறாயினும்இ அவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தல்களுடன் சில சந்தை செயற்பாட்டாளர்கள் முழுமையாக இணங்கியொழுகவில்லை என்பது மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவ்வாறான நடைமுறை தொடருமாயின்இ இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொதுமக்களுக்கான ஆதரவு இல்லாமற் செய்யப்படுகின்ற அதேவேளை கடினமான அத்துடன் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனைத்து ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ‘துன்பத்தை சமமாகப் பகிர்ந்துகொள்ளல்’ என்ற அறநெறி சார்ந்த கடப்பாடு புரந்தள்ளப்படுகின்றது.
இப்பின்னடைவிற்கு எதிராகவும் தேசத்தின் சிறந்த நலனுக்காகவும் இலங்கை மத்திய வங்கியானது ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கான தேவைப்பாடுகள், ரூபாவாக மாற்றுதல்இ இலங்கை மத்திய வங்கிக்கான கட்டாய விற்பனைகள் அடங்கலாக வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல்கள் மீதான அனைத்து ஒழுங்குவிதிகளுடனும் இணங்குவதைக் கண்டிப்பாக கண்காணிப்பதற்கும் உறுதிசெய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதை பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களுக்கும் வலியுறுத்த விரும்புகின்றது. இணங்காமை பற்றி ஏதேனும் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்புடைய சட்டங்களினதும் ஏற்பாடுகளினுள் கடுமையான நடவடிக்கையுடன் கையாளப்படும்.
ஏற்றுமதிப் பெறுகைகளை கண்காணித்தல் முறைமை அத்துடன் எல்லை கடந்த கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றின் அனைத்தையும் உள்ளடக்கிய கண்காணிப்பு முறைமையான பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை என்பவற்றினை நடைமுறைப்படுத்துவதனூடாக வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களுடன் தொடர்பான அதன் இயலளவினை மத்திய வங்கி வலுப்படுத்தியுள்ளது என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களையும் வெளிப்பாய்ச்சல்களையும் கிரமமாக கண்காணிப்பதற்கு இம்முறைமைகள் வசதியளிக்கின்றன. மேலும் எவையேனும் முறைகேடுகளை உரிய காலத்தில் இனங்காண்பதற்கு கணக்காய்வு நிறுவனங்கள் உள்ளடங்கலாக சுயாதீன தொழில்சார் அமைப்புகளின் உதவியும் நாடப்பட்டு வருகின்றது.
ஆகையினால்இ தீவிரமான சவால்மிக்க இச்சூழ்நிலைகளின் கீழ் பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களுக்கும் மிகவும் வேண்டப்படும் உதவியினை வழங்குவதற்கு ஏற்கனவே காணப்படுகின்ற ஒழுங்குவிதிகளுடன் இணங்கியொழுகுமாறும் அரசாங்காத்தினதும் இலங்கை மத்திய வங்கியினதும் முயற்சிகளுக்கு துணையளிக்குமாறும் உரிமம்பெற்ற வங்கிகளும் வர்த்தக சமூகமும் வலியுறுத்தப்படுகின்றன. விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் அனைத்து ஏற்றுமதிப் பெறுகைகளையும் தொடர்ந்து நாட்டுக்கு அனுப்புமாறும்; ஒழுங்குவிதிகளின் பிரகாரம் எஞ்சியிருக்கின்ற வருவாய்களை ஒப்புவிக்குமாறும் ஏற்றுமதி வர்த்தக சமூகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பிலான அனைத்து ஒழுங்குவிதிகளையும் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்வதற்கு வங்கித்தொழில் சமூகம் கோரப்பட்டுள்ளது.
அண்மைய காலத்தில் பொருளாதார அழுத்தங்களைக் குறைப்பதற்கும் இல்லாதொழிப்பதற்கும் குறுகிய கால கடன்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் அயராது முயற்சித்து வருகின்றன. பன்னாட்டு நாணய நிதியத்துடனான பொருளாதார சீராக்க நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. சட்ட மற்றும் நிதியியல் மதியுரைஞர்களின் தேர்ச்சிமிக்க உதவியுடன் படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையும் முன்னெடுக்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்கின்ற கட்டமைப்புசார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதிகம் தேவையான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் அர்ப்பணித்துள்ளன.
தற்போதைய பொருளாதார துன்பங்களையும் இடர்பாடுகளையும் வெற்றிகொள்வது என்பது பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களிடமிருந்தும் கிடைக்கும் கணிசமான அத்துடன் ஒருமைப்பாடுமிக்க முயற்சிகளை வேண்டிநிற்கின்றது என்பதனை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. எவரேனும் ஆர்வலர் குழுவொன்றின் பாகத்தில் ஏற்படும் தவறான நடத்தை நெருக்கடியினை தவிர்க்கமுடியாதவாறு மோசமடையச் செய்வதற்கு வழிவகுக்கும்இ இதனூடாக பரந்தளவான ஊறுபடச்செய்யும் தாக்கங்களை உண்டுபண்ணும். இந்நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டுஇ வலிமைமிக்கதாக நாடு தோற்றம்பெறுவதற்கு இக்கட்டான காலப்பகுதியில் மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு பொறுப்புடன்; நடந்துகொள்வதும் தங்குதடையற்ற தமது ஆதரவினை வழங்குவதும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.