திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், படித்து வந்த ஈரோட்டை சேர்ந்த சுமதி என்ற மாணவி, கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் விடுதியை காலி செய்ய சுமதி முடிவெடுத்திருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
