டாப் 10 சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் மதிப்பு 1,91,622.95 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் நிறுவனங்களாக உள்ளன.
30 நிறுவனங்கள் அடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 1498.02 புள்ளிகள் அல்லது 2.67% ஏற்றம் கண்டுள்ளது.
இந்த ஏற்றத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவந்த்தின் பங்கு விலையானது, 57,673.19 கோடி ரூபாய் அதிகரித்து,4,36,447.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் வரை ஏற்றுமதி செய்யும் மீனாட்சி!

டாடா கன்சல்டன்ஸி ஏற்றம்
இதே டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 47,494.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஹெச் டி எஃப் சி வங்கி சந்தை மதிப்பானது 23,481.09 கோடி ரூபாய் அதிகரித்து, 7,97,251.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பானது, 18,219 கோடி ரூபாய் அதிகரித்து, 6,52,012.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தை மதிப்பு ஏற்றம்
ஹெச் டி எஃப் சியின் சந்தை மதிப்பானது 14,978.01 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பானது, 12,940.69 கோடி ரூபாய் அதிகரித்து, 4,71,397.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது, 12,873.62 கோடி ரூபாய் அதிகரித்து, 5,69,400.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3962.45 கோடி ரூபாய் அதிகரித்து, 16,97,208.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தை மதிப்பு சரிவு
இதே எல்ஐசி-ந் சந்தை மதிப்பானது 7020.75 கோடி ரூபாய் குறைந்து, 4,28,739.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 810.61 கோடி ரூபாய் குறைந்து, 6,19,5512.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

டாப் 10 நிறுவனங்கள்
டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, எல்ஐசி நிறுவனங்கள் உள்ளன.
market capitalization of top firms jumps over Rs.1.91 lakh crore: TCS top gainers
market capitalization of top firms jumps over Rs.1.91 lakh crore: TCS top gainers/தூள் கிளப்பிய டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ்.. ஏமாற்றம் தந்த எல்ஐசி, ஹெச்யுஎல்..!