இந்தியாவில் தங்கத்தினை விரும்பாதவர்கள் இருப்பது கடினம். குறிப்பாக பெண்கள் மத்தியில் இன்னும் ஒரு படி அதிகம். குறிப்பாக திருமண பருவம் மற்றும் விழாக்காலங்களில் தங்க ஆபரணம் இடம்பெறாத விஷேசங்களே இருக்காது எனலாம்.
அந்தளவுக்கு மக்களின் உணர்வுகளோடு கலந்துள்ள தங்க நகை வாங்கும்போது எதனை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம்.
இவ்வாறு வாங்கும் தங்கம் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, முதலீட்டு நோக்கிலும் செய்யப்படுகின்றது. இதே நடுத்தர மக்கள் மத்தியில் அவசர தேவைக்கு பயன்படுத்தும் ஒரு ஆபரணமாகவும் உள்ளது.
தங்கம் விலையை தீர்மானிக்க போகும் 5 முக்கிய அம்சங்கள்.. கவனிக்க வேண்டியது என்ன?
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இப்படி ஆசை ஆசையாய் வாங்கும் நகை எப்படி இருக்க வேண்டும். அதன் தரம் எப்படி இருக்க வேண்டும். வேறு எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும். வாருங்கள் பார்க்கலாம்.
1. நகைக் கடை
2.தங்கத்தின் தரம்
3.தங்கத்தின் விலை
4.செய்கூலி
5.எடையை சரியாக பாருங்கள்
சரியான நகைக் கடையா?
இந்தியாவில் நகைக் கடை இல்லாத ஊரே இல்லை எனலாம். எனினும் நீங்கள் நகை வாங்கும்போது சரியான கடையை தேர்வு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத கடைகளில் வாங்கும்போது உங்களின் தங்கத்தின் தரத்தினை குறைக்கலாம். போலியை கூட கொடுக்கலாம். ஆக வாங்கும் தங்கம் கொஞ்சமாக இருந்தாலும் கூட, அதனை சரியான நகை கடையா என பார்த்து வாங்குங்கள்.
தங்கத்தின் தரம் எப்படி?
இரண்டாவது பலரும் ஏமாறுவது தங்கத்தின் தரத்தில் தான். இன்று பல கடைகளிலும் நடக்கும் மோசடிகளில் இதுவும் ஒன்று. நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரம் என்ன முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது தரமானது எனில் BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 22 காரட் நகை எனில் அது 91.6% சுத்தமானது.
தங்கம் விலை என்ன?
தங்கம் வாங்க செல்கிறீர்களா? அப்படி எனில் அதன் விலை என்ன? அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சந்தையில் தங்கத்தின் விலை தினசரி என்ன நிலவரம்? 24 காரட் என்ன விலை, 22 காரட் விலை என்ன என தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக உள்ளூரில் இருக்கும் நகைக்கடைகளில் விலை நிலவரம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.
செய்கூலி எவ்வளவு?
தங்க நகைக்கான செய்கூலி என்ன? என்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். ஒரு நகை வாங்கும்போது உங்கள் நகையின் விலையினை விட, செய்கூலி தான் அதிகமாக இருக்கும். பொதுவாக 5% முதல் 30% வரையில் இருக்கும். நீங்கள் வாங்கும் நகை மெஷின் மேட் நகையா அல்லது கையால் செய்யப்பட்ட நகையா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதனை பொறுத்து செய்கூலி மாறுபடும்.
நகையின் எடை?
தங்க நகை வாங்கும்போகும் நகையின் மாடலை பார்த்தோமா? அதன் தரம் என்ன என்பதை பார்த்தோமா? என்பதை மட்டும் பார்க்காமல், நகையின் எடையும் சரியா? அந்த எடைக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக கல் பதித்த நகைகள் எனில், அது இன்னும் கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம் தான்.
What are the 5 things to look out for when buying gold jewellery?
What are the 5 things to look out for when buying gold jewellery?/நகை வாங்க போறீங்களா.. இந்த 5 முக்கிய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!