புதுடெல்லி: கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் சராசரியாக 21 நாள்கள் மட்டுமே கூடி உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநில சட்டபேரவைகளின் செயல்பாடுகள் குறித்து, ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:* கடந்தாண்டில் மாநில சட்டப்பேரவைகள் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே கூடியுள்ளன. இதில், உயர்க் கல்வி, ஆன்லைன் விளையாட்டு, மத மாற்றம், கால்நடைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட 500 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.* பெரும்பாலான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் நிறைவேறி உள்ளன. கடந்தாண்டு கர்நாடகாவில்தான் அதிகபட்சமாக 48 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. * மிகவும் குறைந்த அளவாக டெல்லியில் 2, புதுச்சேரியில் 3, மிசோரத்தில் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. * கடந்தாண்டு 44 சதவீத மசோதாக்கள் அறிமுகம் செய்த அதே நாளில் நிறைவேற்றப்பட்டு உளளது. * குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்கள்தான் இதே போன்று வேகமாக மசோதாக்களை சட்டமாக இயற்றி உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.