வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, ரூ.1,034 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில், ராவத்தின் மனைவி பெயரில் உள்ள, 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு ஊழலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சிவசேனா தலைவர் பால் தாக்கரே மீது ஆணையாக இதை நான் சொல்கிறேன். எங்களுக்கு போராட பால் தாக்கரே கற்று கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இது பொய்யான குற்றச்சாட்டு. போலியான ஆதாரம். நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, இன்று காலை முதல் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement