நேற்று இலங்கை… இன்று ஈராக்… தொடரும் மக்கள் போராட்டம்!

ஈராக்கில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் அல்-சதரின் கட்சி 73 இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்பதுடன், அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற பெருமையையும் பெற்று திகழ்ந்தது.

எனினும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, முகமது அல்-சூடானி ஈராக்கின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதே இந்த போராட்டத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நூற்றுக்கணக்கான அல்-சதர் ஆதரவாளர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

பண மோசடி வழக்கு: நேரில் ஆஜராகும்படி பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

போராட்டத்தை உடனே கைவிடும்படி பிரதமர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு படையினருக்கு அவர் உத்தரவும் இட்டுள்ளார். இதனையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இலங்கையில் அண்மையில் வெடித்த மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவை முற்றுகை இடப்பட்டன. இந்த நிலையில் ஈராக்கில் நாடாளுமன்றமே முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.