திருமலை: டிவி பார்க்க எதிர் வீட்டிற்கு சென்றபோது பள்ளி மாணவனுக்கு ஆபாச வீடியோ காட்டி 4 குழந்தைகளின் தாய் காமக்களியாட்டம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்ஜில் சிறுவனுடன் தங்கிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் திருமணமாகி 4 குழந்தைகள் பெற்ற இளம்பெண், எதிர் வீட்டில் இருந்து டிவி பார்க்க வந்த 15 வயது பள்ளி மாணவனுக்கு ஆபாச படம் காட்டி, தகாத உறவு வைத்துள்ளார். மேலும், சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி, லாட்ஜில் தங்கியபோது போலீசார் சுற்றி வளைத்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து கிருஷ்ணா நகர் இன்ஸ்பெக்டர் துர்கா ராவ் கூறியதாவது: கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா குட்மேன் பேட்டையை சேர்ந்தவர் ஸ்வப்னா (30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், குழந்தைகளுடன் வேறு இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஸ்வப்னாவின் வீட்டுக்கு எதிரில் இருந்த குடும்பத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் டிவி பார்ப்பதற்காக, ஸ்வப்னாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவனை ஸ்வப்னா தனது மயக்க வலையில் வீழ்த்த முற்பட்டார். சிறுவனிடம் நைசாக ஆபாச வீடியோக்கள் காண்பித்து அவனுடைய உணர்ச்சியை தூண்டி பாலியல் உறவில் ஈடுபட்டார். இதுபோன்று பல மாதங்களாக தொடர்ந்து வந்ததால் மைனர் சிறுவனிடம், ‘எனது கணவர், குழந்தைகளை நான் விட்டு வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’ என சிறுவனுக்கு மூளைச்சலவை செய்துள்ளார். இதற்கு சிறுவனும் சம்மதித்துள்ளான். அதன்படி, கடந்த 19ம் தேதி மைனர் சிறுவனை ஸ்வப்னா ஐதராபாத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், சிறுவனின் தந்தை கடந்த திங்கட்கிழமை சிறுவன் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். மைனர் சிறுவன் அவ்வபோது ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரும் காணாமல் போனதால் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ஸ்வப்னா செல்போனை ஆய்வு செய்து விசாரணை தொடங்கினர். இதில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாலாநகரில் ஸ்வப்னா மைனர் சிறுவனுடன் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், ஐதராபாத்தில் இருந்து ஸ்வப்னாவை கைது செய்து குடிவாடாவுக்கு அழைத்து வந்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, குடிவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.