வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கராச்சி : பாகிஸ்தானில் பெய்த கன மழையால், பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுதும் பரவலாக கன மழை கொட்டுவதால், இது வரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள், 32 பெண்கள் உட்பட 320 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான், சிந்து, கராச்சி, கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாகாணங்கள்தான் கன மழையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், விரைவில் நிவாரணம் அளிக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement