”பொன்னி நதி பாக்கணுமே..பொழுதுக்குள்ள!” ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது “பொன்னி நதி” பாடல்!

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஆயிரம் ஆண்டுகளுக்கு சோழ இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்ட வரலாற்று நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

Ponniyin Selvan' team releases Karthi's Chola commander look

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் இன்று வெளியிடப்பட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் பிரமாண்டமாக நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியானது.

image

வாணர் குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத் தேவன், ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் வேளையில் சோழ தேசத்தின் வீர நாராயண ஏரிக்கரை மீது குதிரைப் பயணம் மேற்கொண்டு வருவான். இங்குதான் ‘பொன்னியின் செல்வன்’ கதையே துவங்கும். சோழப் பேரரசின் மிகப்பெரிய வீர சரித்திரத்தில் பிற்காலத்தில் இடம்பெறப் போகிறோம் என்பது தெரியாமலேயே, வீர நாராயண ஏரியின் வசீகரத்தை கண்டுக்கொண்டே செல்வான். பிரமாண்டமாக பெருக்கெடுக்கும் காவிரியின் அழகு வந்தியத்தேவனை திக்கு முக்காடச் செய்யும்.

Ponniyin Selvan: Giri Publications: Amazon.co.uk: by கல்கி (Author):  9788179505298: Books

“வடவாறு பொங்கி வருது வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வந்து வேடிக்கை பாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே!” என்ற நாட்டுப்புறப்பாடல் வந்தியத் தேவன் செவிகளில் விழும். இதனை நினைப்படுத்தும் விதமாகவே “பொன்னி நதி” பாடல் வெளியாகியுள்ளது. “பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள! கன்னிப்பெண்கள் காணணுமே காற்றைப்போல” என்ற வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது பாடல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.