பாட்னா:”பிரதமர் மோடி செயல்படுத்திய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை காரணமாகவே,
மக்கள் தற்போது உயிர் பிழைத்துள்ளனர்,” என, பீஹார் பா.ஜ., தலைவரும்,
அமைச்சருமான ராம் சூரத் ராய் தெரிவித்தார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்
குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முசாபர்பூரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராம் சூரத் ராய்
பேசியதாவது:கொரோனா பாதிப்பிலிருந்து பிழைத்து தற்போது மக்கள் உயிருடன்
உள்ளனர் என்றால், அந்த பெருமை பிரதமர் மோடிக்கே சேரும்.
அவர் கொரோனா நோய்
தொற்றின்போது, உரிய நேரத்தில் செயல்பட்டு தடுப்பூசிகளை இலவசமாக
வழங்கினார்.மற்ற நாடுகளை விட கொரோனா பெருந்தொற்றை இந்தியா திறம்பட
கையாண்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் பல நாடுகள்
இன்னும் போராடி வருகின்றன. அதேநேரத்தில் நம் நாட்டில் பொருளாதாரத்தை
வலுப்படுத்துவதற்கான பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement