
யோகிபாபு, தினேஷ் மாஸ்டர் நடிக்கும் ‛லோக்கல் சரக்கு'
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்', 'கருமேகங்கள் கலைகின்றன' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‛லோக்கல் சரக்கு' என டைட்டில் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூரி வெளியிட்டார்.