ரஷ்ய கப்பல்களில் குவிக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ஜனாதிபதி புடின் அதிரடி!


  அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கும் பணி வரும் மாதங்களில் தொடங்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நகரில் ரஷ்யாவின் கடற்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்று பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் திறன், நமது இறையாண்மை மற்றும் சுகந்தரத்தை மீற முடிவு செய்யும் அனைவருக்கும் மின்னல் வேகத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது எனத் தெரிவித்தார்.

ரஷ்ய கப்பல்களில் குவிக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ஜனாதிபதி புடின் அதிரடி! | Hypersonic Missile Delivery Begin Putin Says

அத்துடன் சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கப்பலின் சேவைக்கான பகுதி ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நலன்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

மேலும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தல் என்றும், கடல் பிராந்தியங்களில் நோட்டோ உள்கட்டமைப்பை ஆதிக்கம் செலுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டு இருப்பதாக ஜனாதிபதி புடின் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய கப்பல்களில் குவிக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ஜனாதிபதி புடின் அதிரடி! | Hypersonic Missile Delivery Begin Putin Says



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.