ராய்ச்சூர் : பயணியரின் வசதிக்காக, ராய்ச்சூர் ரயில் நிலையத்தில், ‘லிப்ட், எஸ்கலேட்டர்’ அமைக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும்.ராய்ச்சூர் ரயில் நிலையம், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பழைய ரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். இங்கு மூன்று பிளாட்பாரம்கள் உள்ளன. தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, ராய்ச்சூர் வழியாக ரயில்கள் செல்கிறது.
பெங்களூரு, ஹூப்பள்ளி, ஹைதராபாத், மும்பை வரை, இந்த பாதை வழியாக ரயில்கள் இயங்குகின்றன.கூட்ஸ் ரயில்களும் இயங்குகின்றன. லிப்ட், எஸ்கலேட்டர் இல்லாததால், பயணியர் அவதிப்பட்டனர். மக்களின் வசதிக்காக ரயில் நிலையத்தில், அமைக்கும்படி, மக்கள் பிரதிநிதிகளும், உள்ளாட்சிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.இதை ஏற்றுக்கொண்ட அரசும், ராய்ச்சூர் ரயில் நிலையத்தில் அமைக்கும்படி, அரசு உத்தரவிட்டது. இதன்படி ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இரண்டு லிப்ட், இரண்டு எஸ்கலேட்டர் அமைக்க, முதற்கட்டமாக 1.3 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. பணிகள் முடிந்தால், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement