மகாராஷ்டிராவை சேர்ந்த மீனாட்சி வால்கே, மூங்கில் பெண்மணி என பாசமாக அழைக்கப்படுகிறார். மற்ற பெண்களை போல ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக இருந்த மீனாட்சி, 4 ஆண்டுகளுக்கு பிறகு அபிசார் இன்னோவேட்டிவ்ஸ் என்ற கைவினை பொருட்கள் தொழிலைத் தொடங்கினார்.
இதன் மூலம் கூடைகள், தட்டுகள், நகைகள் மற்றும் விளக்குகள் போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றார்.
தனது வீட்டில் இருந்து ஆரம்பித்த வணிகத்தினை இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்து வருகின்றார். ஏற்றுமதியும் செய்து வருகின்றார்.
கார்ப்பரேட் வேலையை விட எங்களுக்கு இது தான் பெஸ்ட்.. 5 எம்பிஏ பட்டதாரிகள் எடுத்த அதிரடி முடிவு!
விலை என்ன?
இதன் விலை 25 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரையில் உள்ளது. இதனை டெல்லி, மும்பை, புனே உட்பட பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை 2018ல் வரையில் தொடர்ந்தார். அதன் பிறகு தனது பிரசவத்தின் போது குழந்தையினை இழந்தவர், அதன் பிறகு தொழிலை தொடரவில்லை. அதிகப்படியான வேலையால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
குடும்ப பிரச்சனை
ஆனால் மீனாட்சி இந்த குடும்ப பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டும், அதற்காக அவரது வணிகத்தினை தொடர வேண்டும் என குடும்பத்தினர் நினைத்தனர். எனினும் உடனடியாக அவள் செய்யவில்லை. எனினும் அவரின் கணவர் உந்துலால் திரும்ப தொழில் செய்ய திரும்பினார். அந்த காலகட்டத்தில் தனக்கான 70 பயிற்சியினையும் எடுத்துக் கொண்டார்.
பயிற்சிக்கு பிறகு உத்வேகம்
இந்த பயிற்சிக்கு பிறகு கைவினைபொருட்களை செய்வதில் ஆர்வம் அதிகரித்தது. இந்த பயிற்சிக்கு முன்னதாக தனக்கு மூங்கில் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அதனை கற்றுக் கொண்ட பிறகு, என்னால் அதனை நன்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஊக்கப்படுத்திய மக்கள்
பயிற்சி காலத்தில் எங்களுக்கு ஒரு கிட் வழங்கப்பட்டது. அதன் மூலம் நான் சிறியதாய் பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். எனது பொருட்களை பற்றி அறிந்த உள்ளூர் மக்கள் ஆர்டர்களை கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் நாக்பூரில் ஒரு கண்காட்சியும் நடந்துள்ளது. அந்த கண்காட்சியில் பங்கேற்ற பிறகு, மக்கள் எந்தளவுக்கு மூங்கில் பொருட்களை விரும்புகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. இது மேலும் என்னை ஊக்கப்படுத்தியது.
மிஸ் க்ளைமேட்
2019 எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்போது மிஸ் க்ளைமேட் என்ற போட்டியின் அமைப்பாளர்கள் மீனாட்சியை அணுகியுள்ளனர். சுற்றுசூழலுக்கு உகந்த ஒரு கிரீடத்தை செய்து கொடுக்க அணுகினர். அவர்களுக்காக கிரீடங்களையும் செய்து கொடுத்தேன். அதன் பிறகு பல தரப்பினருக்கும் பிடிக்கவே, அதுவே திருப்பு முனையாக அமைந்தது.
மூங்கில் ராக்கிகள்
அதன் பிறகு பிரெண்ஷிப் பேண்ட், கியூஆர் கோடு என பல விதங்களில் வடிவமைதேன். எனது தயாரிப்புகளில் இன்று வரையில் ராக்கிகள் சிறந்த பொருளாக உள்ளது. பிளாஸ்டிக்கில் இருந்து விலகி அலங்காரத்திற்காக ருத்ராட்சம், துளசி இலைகளை பயன்படுத்துகிறேன். இதில் பயன்படுத்தும் நூலும் கூட காதியால் ஆனது.
ரூ.3 லட்சம் வருமானம்
2018ல் முதன் முதலில் உருவாக்கிய பிறகு அதனை வாடிக்கையாளார்கள் பெரிதும் விரும்பவில்லை. ஆனால் இன்று அவற்றை லண்டன் வரையில் ஏற்றுமதி செய்கிறேன். அன்று 500 ராக்கிகள் கூட விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு 10,000 ராக்கிகளை விற்பனை செய்து அதன் மூலம் 3 லட்சம் லாபம் பார்த்தேன் என்றும் கூறினார்.
பலருக்கும் பயிற்சி
வணிகம் வளர வளர முகேஷும் மீனாட்சிக்கு துணையாக வணிகத்தினை மேம்படுத்த உறுதுணையாக நின்றார். முழு நேரமாக வணிகத்தினை செய்ய ஆரம்பித்தனர்.
இன்று மீனாட்சியின் படைப்புக்கு ஏராளமான ஆர்டர்கள் மட்டும் அல்ல, பல அவார்டுகளும் கிடைத்து வருகின்றன. வணிகம் மட்டும் அல்ல, 200க்கு மேற்பட்ட பெண்களுக்கு மீனாட்சி பயிற்சியியையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளார். பெண்கள் அவர்களாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். தன்னிறைவு பெற வேண்டும் என கூறியுள்ளார்.
Business started with just Rs.50 Earnings in Lakhs: Exports to London
Business started with just Rs.50 Earnings in Lakhs: Exports to London/வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் வரை ஏற்றுமதி செய்யும் மீனாட்சி!