வரலாற்றில் உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி என்பவற்றின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வணிகப்பொருள் வர்த்தக மீதி 2002 ஓகத்திலிருந்து முதற்தடவையாக 2022 யூனில் மிகையொன்றினை பதிவூசெய்துள்ளது.
பயண ஆலோசனைகள் மற்றும் தற்போதைய எhpபொருள் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் என்பவற்றுடன் தொடர்புடைய எதிர்மறையான எண்ணங்களிற்கு மத்தியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் தாழ்ந்த மட்டத்திலிருந்து 2022 யூனில் அதிகரிப்பொன்றை (ஆண்டிற்காண்டு) பதிவூசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 மேயூடன் ஒப்பிடுகையில் 2022 யூனில் மிதமடைந்து வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல் வாங்கல்களின் உத்தியோகபூவற்ற சந்தை நடவடிக்கையின் அதிகரிப்பினைப் பிரதிபலித்தது.
2022 யூன் மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவூசெய்த அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவூசெய்தன.
மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையை தொடா;ச்சியாக வழங்கியதால் மொத்த அலுவல்சாh; ஒதுக்குகளின் பயன்படுத்தத்தக்க மட்டம் குறைவடைந்துள்ளது. அதேவேளைஇ வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசாp நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 360 ரூபாவாகக் காணப்பட்டது.
முழுவடிவம்