பாட்னா: பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுபிழை காரணம் என பல்கலை., தெரிவித்து உள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண்மிதிலா பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். இதில் அவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.
இதே பல்கலை.,யை சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை நிர்வாகம் வழங்கி உள்ளது.
இச்சம்பவம் குறித்து பல்கலைகழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில் மேற்கண்ட இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சு பிழைகள் இருந்தன. அவை கண்டுபிடித்த பிறகு சரியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன. இவைகள் வெறும் அச்சுபிழை மட்டுமே வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement