நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி,அதன் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இதனால் இனி வாடிக்கையாளர்கள், புதியதாக கடன் வாங்குபவர்கள் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
ஹெச்டிஎஃப்சி-யின் இந்த வட்டி அதிகரிப்பாகது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. சிலிண்டர் முதல் வட்டி அதிகரிப்பு வரை.. பிரச்சனை?
ரிசர்வ் வங்கியின் முடிவென்ன?
இந்திய ரிசர்வ் வங்கியானது ஏற்கனவே ரெப்போ விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், வரவிருக்கும் வாரத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கலாம்
அதோடு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது நிச்சயம் இந்திய ரிசர்வ் வங்கியினையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் ஹெச்டிஎஃப்சி நிதி நிறுவனமானது அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை முன் கூட்டியே அதிகரித்துள்ளது.
ரீடைல் பிரைம் லெண்டிங் ரேட்
ஹெச்டிஎஃப்சி அதன் வீட்டுக் கடனுக்கான ரீடைல் பிரைம் லெண்டிங் ரேட்டினையும், ARHL ரேட்டினையும் அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள் இனி கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே தவணைத் தொகை செலுத்திக் கொண்டுள்ளவர்கள் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
கவனிக்க வேண்டிய விஷயம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்ன விஷயம் என்னவெனில் 2 மாதங்களில் ஹெச்டிஎஃப்சி 5 முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து 115 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம்?
புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கடன் விகிதங்களின் மத்தியில், கடன் தொகையை பொறுத்து 7.80% மற்றும் 8.30% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இது தற்போது 7.55% முதல் 8.05% வரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே ஏற்கனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம்.
ஹெச்டிஎஃப்சி வட்டி அதிகரிப்பு
ஹெச்டிஎஃப்சி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தினை மாற்றியமைத்து வருகின்றது. ஹெச்டிஎஃப்சியின் இந்த நடவடிக்கையானது, ரிசர்வ் வங்கி கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் முறையே 40 மற்றும் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் செய்யப்பட்டுள்ளது.
hdfc hikes lending rate by 25 basis points from august 1: home loan to be costlier
hdfc hikes lending rate by 25 basis points from august 1: home loan to be costlier/2 மாதத்தில் 5 முறை வட்டி அதிகரிப்பு.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள் கவலை!