வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்படுவது குறித்து 6 மாநிலங்களில் உள்ள 13 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ம.பி., குஜராத், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் உ.பி., மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. ம.பி.,யில் போபால் மற்றும் ரைசன் மாவட்டங்களிலும், குஜராத்தில் பரூச், சூரத் , நவ்சரி மற்றும் ஆமதாபாத் மாவட்டங்களிலும், பீஹாரில் அராரியா மாவட்டத்திலும், கர்நாடகாவில் பக்தல் மற்றும் தும்கூர் மாவட்டங்களிலும், மஹாராஷ்டிராவில் நந்தத் மற்றும் கோலாபூர் மாவட்டத்திலும், உ.பி.,யின் தியோபாண்ட் மாவட்டத்திலும் சோதனை நடந்தது.
பயங்கரவாத தொடர்பு குறித்து கடந்த ஜூன் 25ல் ஐபிசி 153 ஏ மற்றும் ஐபிசி பி மற்றும் யுஏ(பி) சட்டத்தின் கீழ் 18, 19பி, 38, 39 மற்றும் 40 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement