Tamil news today live: இந்தியாவில் தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது.. வெங்கையா நாயுடு

பெட்ரோல்-டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டி

டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. சேப்பாக் – கோவை அணிகள் மோத உள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

பைடனுக்கு மீண்டும் கொரோனா

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
12:17 (IST) 31 Jul 2022
தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது

இந்தியாவிலேயே தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது. காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு என தனியாக செயல்படுவது பாராட்டுக்குரியது. கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

12:16 (IST) 31 Jul 2022
தினகரனுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு

தேனியில் அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் தலைமையில், நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

11:42 (IST) 31 Jul 2022
புதுச்சேரியில் கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது 813 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.

10:21 (IST) 31 Jul 2022
சென்னை டு லண்டன் இனி தினசரி விமான சேவை!

சென்னை-லண்டனுக்கு வாரத்தில் 3 நாட்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேரடி விமானம் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் விமானம் இயக்கலாம் என பயணிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சேவை வழங்கப்பட உள்ளது.

09:33 (IST) 31 Jul 2022
பள்ளிகளில் இனி செயலி மூலம் வருகைப்பதிவு

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யப்பட உள்ளது. பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

09:12 (IST) 31 Jul 2022
காசிமேடு மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்

காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அலைமோதும் அசைவப் பிரியர்கள் கூட்டம். ஞாயிற்றுகிழமை என்பதால் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம்.

மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.