தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மத்திய அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இணைப்பு! மத்தியஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்தியஅரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்தியஅரசு கடந்த ஆண்டு இறுதியில் (2021) அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாப்படி,  நாட்டிலிருக்கும் அனைத்து அணைகளையும் ஒரே சீராகப் பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா கடந்த  2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. … Read more

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள 20 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31-க்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நாளை, நாளை மறுநாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ‘பை பை மோடி’ பேனர் வைத்ததால் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ‘பை பை மோடி’ பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடந்த அரசியல் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம்  நாளையும் (ஜூலை 2), நாளை மறுநாளும் ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை … Read more

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!

தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தேனியில் வசித்த எஸ்கே.அய்யாசாமி – ஏ.ரத்தினம்மாள் தம்பதியரின் மகன் ராஜன் என்ற சேர்மராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார், பத்தாம் வகுப்பு வரை ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர், உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் … Read more

ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! – முழுவிவரம்

கோவிட் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவரும் நிலையில், 2022 ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), செஸ் வரி ரூ.11,018 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,197 கோடி உட்பட) என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2021 … Read more

கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! – நடிகை மீனா வேண்டுகோள்

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28 அன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை … Read more

ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 1.44 லட்சம் கோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட 56 சதவீதம் அதிகம் ஆகும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் … Read more

குடும்பங்களின் சிறப்பை உணர்த்தியவர் – ‛சகலகலா' விசு பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் விசு. மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தன் சினிமா வாயிலாக குடும்பங்களின் மகத்துவத்தை எளிமையாக எடுத்துரைத்தவர். இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் பேசப்படும். மரக்காணத்தில் 1945ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் விசு. இன்று அவரின் பிறந்தநாள். எம்.ஆர்.விஸ்வநாதன் என்கிற விசு சினிமாவில் கடந்த வந்த பாதையை சற்றே ரீ-வைண்ட் செய்து பார்ப்போம்… … Read more

META: ஊழியர்களை மிரட்டும் மார்க் ஜூக்கர்பெர்க்.. எப்ப என்ன நடக்குன்னே தெரியல..?

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா-வின் சிஇஓ பொருளாதாரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில் அனைத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எப்ப வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் உடனடியாகச் செலவுகளைக் குறைக்க முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இப்பட்டியலில் தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனமும் இணைந்துள்ளது. பணிநீக்க சுனாமி: பைஜூஸ் முதல் டெஸ்லா வரை.. உஷார் மக்களே..! மெட்டா 2022 ஆம் … Read more

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெட்ரிக் டொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், 100,000 மெட்ரிக் டொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் நேற்று (30) கைச்சாத்திட்டுள்ளது. இவற்றிற்கான மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள். உலக வங்கி 70 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதுடன், மீதி 20 மில்லியன் டொலர்களையும் லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது. இவ்வாறு கொள்வளவு செய்கின்ற இந்த எரிவாயு சிலிண்டர்கள் நான்கு மாதங்களுக்கு நாட்டில் விநியோகிக்க போதுமானதாக இருக்கும். இவற்றில் 70% எரிவாயு வீட்டுப் பாவனையாளர்களுக்கு … Read more