ஓ.பி.எஸ் தரப்பு செயல்பாடு எம்.ஜி.ஆர்-ன் நோக்கத்துக்கு எதிரானது; உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் மனு

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஒரு பெரும் புயலே வீசிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதலால் அதிமுக இரண்டுபட்டுக் கிடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்ய ஒரே களேபரமாக முடிந்தது. மேலும், ஜூலை 11ம் … Read more

திராவிட மாடல் படி திருமா நீங்கள் பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா? – தமிழ் நடிகை போட்ட டிவிட்.!

புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  வேட்பாளர் திரௌபதி முர்முவை சர்க்கஸ் புலி என்று திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், காட்டு யானை போல அல்லாமல், பாகன் கையில் சிக்கிய யானை போல … Read more

` உடல் சரியில்லை என்றாலும் உள்ளம் சரியாக இருக்கிறது!' – தன் ஹார்மோன் பிரச்னை பற்றி ஸ்ருதிஹாசன்

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் ஸ்ருதி, தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். பொதுவாகவே, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளில் பிசிஓடியும், எண்டோமெட்ரியோசிஸும் முக்கியமானவை. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு, ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் பிரச்னை. இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையற்று வரும். ஸ்ருதி ஹாசன் எண்டோமெட்ரியோசிஸ் என்பது கர்ப்பப்பை அகப்படலம் என … Read more

கோவில் சொத்து மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால், பற்றாக்குறை இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யலாம் – உயர்நீதிமன்றம்

அறநிலையத்துறை கோவில்களின் சொத்துகள் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை கோவில் பணிக்காக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோவில் நிலத்தில் உள்ள கட்டிடத்தை சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்கள் சொத்துக்களை முடக்க அறநிலையத்துறைக்கு … Read more

சென்னையில் ஜூலை 4-ல் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னையில் வரும் ஜூலை 4-ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில், ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதல்வர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஓராண்டு காலத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் … Read more

உக்ரைனில் இருந்து வெளியேறியவர்களின் புகலிடமான இஸ்கான் கோவில்.. கொடூர தாக்குதல்களை மறக்கத் தொடங்குவதாக தகவல்..!

அயர்லாந்தின் இனிஸ் ராத் தீவில் அமைந்துள்ள இஸ்கான் கோவில், உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறிய மக்களின் புகலிடமாக மாறியுள்ளது. இஸ்கான் என்று அறியப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்களை கொண்டுள்ளது. அப்படி, உக்ரைனின் மரியுபோலில் இருந்த கிருஷ்ண பக்தர்கள், போர் பாதிப்பினால் அங்கிருந்து வெளியேறி இந்த இஸ்கான் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். மான்கள் மற்றும் மயில்கள் சுற்றித் திரியும் இந்த அழகிய தீவில் இருக்கும் போது, பேரழிவிற்குள்ளான மரியுபோலின் கொடூர … Read more

“எஸ்பிஐ தங்க நகைக்கடன்கள் மதிப்பு ரூ.1 இலட்சம் கோடியைத் தாண்டியது” – தலைவர் தினேஷ் காரா

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைக் கடன்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் தங்க நகைக் கடன்கள் வழங்குவது குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தங்க நகைக் கடன்களில் 24 விழுக்காட்டை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link

கனடாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி…

கனடாவுக்கு பயணிப்போருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி பெறாத பயணிகள் அதற்கான முறையான விதிவிலக்கு பெறாத நிலையில், கனடாவுக்குள் நுழைந்ததும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலையில், முதல் நாள் மற்றும் எட்டாவது நாள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுதல், யாராவது ஒருவரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தல் முதலான நடைமுறைகள் தொடர இருக்கின்றன. … Read more

சென்னையில் 4ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு – 90ஆயிரம் பேருக்கு வேலை! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: சென்னையில் வரும் 4ம் தேதி மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற உள்ளதாகவும், அதில், 90ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னையில்  அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு … Read more

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. பாசஞ்சர் ரயில் இரண்டரை வருடங்களுக்கு பிறகு விரைவு ரயிலாக மாற்றப்பட்டு திருப்பதிக்கு இன்று மாலை புறப்பட்டது.  விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக இரவு 11 மணிக்கு விரைவு ரயில் திருப்பதி சென்றடைகிறது.