அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க கோரிய சிவசேனா கூட்டணியின் கோரிக்கை நிராகரிப்பு; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிரா சட்டப் ேபரவை கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். … Read more

’400மீ ஆழத்தில் வேலை செய்தவர் எப்படி 4 மீட்டரில் உயிரிழப்பார்?’- தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி துறைமுக கப்பலில் பணிக்கு சென்ற இளைஞர் மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் சம்ராஜ் (27), இவர், தூத்துக்குடி, துறைமுக கப்பலில் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று என்.வி. ஸ்டார்க் என்ற கப்பலை பழுது பார்க்க சம்ராஜ் (27), மற்றும் அவருடன் கண்ணன் (27) என்பவரும் 4 மீட்டர் அடியில் பழுது … Read more

இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு – தங்கம் விலை உயரப்போகிறது?

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலை மேலும் உயரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் இறக்குமதியால் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு குறையும் சூழல் உருவாவதை தடுக்க, மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவற்காக, சுங்க வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும் நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பினால் … Read more

"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” – அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆர்.மாதவன். நாசா வேலையை உதறித் தள்ளியவரை நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டவர் தான் இந்த நம்பி நாராயணன். இந்த படத்தின் வேகத்திற்கு ஏற்ப கதையைப் புரிந்து கொள்ள, படத்தை பார்க்கும்முன் இந்த காலக்கட்டங்களை குறித்து அறிந்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக உங்கள் பார்வைக்கு விரியும். அந்த முக்கியமான 4 கால கட்டங்கள் இதோ! 1.1991-1992  சோவியத் யூனியனாக வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்த … Read more

எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: எம்.ஜி.ஆர்., நோக்கத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு செயல்பாடுகள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளார். அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது: பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் செயல்பாடு எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது. கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிராகவும், … Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி : ஜேம்ஸ் வசந்தன் கடும் கோபம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சின்னத்திரை நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியும், நல்ல விஷயங்களை பாராட்டியும் பேசி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டாலே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனின் கருத்தைக் கேட்க அவரது சோஷியல் மீடியாவுக்கு படையெடுத்து விடுவார்கள். இந்நிலையில், அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான … Read more

ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றிய மத்திய அரசின் அறிவிப்பு.. ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு..!

2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டின் முதல் வர்த்தக நாளில் எதிர்பார்க்கப்பட்டத்தை போலேவே சரிவுடன் துவங்கியுள்ளது, இதைவிட முக்கியமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 79 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது. இதைத் தாண்டி அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் தாக்கத்தால் இந்திய சந்தையில் இருந்து முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பெரிய ஓட்டையை உருவாக்கிய நிலையில் … Read more

சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடும் வகையில்

ஜூன் 30, 2022 அன்று, தேசிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் பாராளுமன்றத்தின் பங்கை அங்கீகரிக்கும் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த நாள் முதன்முதலில் ஐ.நா பொதுச் சபையால் 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது, இது தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பின் (I.P.U) 129 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. 1889 ஆம் ஆண்டில் இதே தினத்தில் முதன்முதலில் … Read more

கடல், காற்று, கப்பல்.. பவித்ரா ஜனனி கார்டிலியா டைரீஸ்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கார்டிலியா’ என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வரையில் 2 நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலாத் திட்டம் என இரண்டு … Read more

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.!

குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது மே மாதம் முதல் அதிகரித்து காணப்படும். குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தளர்வுகள் காரணமாக மீண்டும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் … Read more