“எவ்வளவு காலம் நுபுர் ஷர்மாவைக் காப்பாற்றுவீர்கள்..?" – மோடியைச் சாடிய அசாதுதீன் ஓவைசி

கடந்த மாதம் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட டெய்லர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இஸ்லாமியர்கள் இருவரால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,“ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட … Read more

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு முகக்கவசம் வழங்கும் எந்திரம்.. கோயம்புத்தூரில் அறிமுகம்..

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு முகக்கவசத்தை வழங்கும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் எண் பிளாட்பாரமில் நிறுவப்பட்டுள்ள இந்த டிராப் என் டிரா (Drop and Draw) எந்திரத்துக்குள் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை செலுத்தி விட்டு முகக்கவசத்தை பெற்றுக்கொள்ளலாம். உள்ளே செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிறு துண்டுகள் ஆக்கப்பட்டு, பின்னர் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். Source link

10-க்கும் மேற்பட்டோர் கூடும் நிகழ்வுகளில் முகக்கவசம் அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுகின்ற நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அங்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கொள்வது அவசியம்” என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் இந்திய மகளிர் சிறப்பு சிறுநீரியல் சங்கம் மற்றும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மகளிர் சிறப்பு சிறுநீரியல் சர்வதேச மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை … Read more

OnePlus Nord 2T 5G: ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி போன் அறிமுகம் – வாங்கலாமா? விலை அம்சங்கள் என்ன…

OnePlus Nord 2T 5G Price in India: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த 5ஜி மொபைல் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. போனில், 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 4,500 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Jade Fog & Shadow grey ஆகிய இரு நிறங்களில் போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் … Read more

உணவகங்களுக்கு செல்லும் இலங்கையர்களின் தற்போதைய நடவடிக்கை

சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை மட்டுமே குடித்து விட்டுச் செல்கின்றனர் என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.   உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் நெருக்கடி எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் 80 வீதமான  உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி … Read more

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மாஸ்கோ விமானநிலையத்தில் கைது..!

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டினி கிரீனர், கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில்  மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற, 31 வயதாகும் கிரீனர் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று மாஸ்கோ விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரிட்டினி கிரீனருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  Source link

பஞ்சாப் : இன்று முதல் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

பஞ்சாபில் இன்று முதல் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வெற்றி பெற்றால் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ள முதலமைச்சர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். Source link

"பாலா படங்களிலேயே மிகக்குறைந்த நாள்களில் எடுக்கப்பட்ட படம் அது"- ஒளிப்பதிவாளர் சுகுமார்

கதைக்கு ஏற்ற கச்சிதமான ஒளிப்பதிவினால் கவனம் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி, தர்மதுரை என அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு காட்சி அழகூட்டியவர். இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தந்தை மகள் உறவை மையப்படுத்திய ஒரு ஆல்பம் சாங் படப்பிடிப்புக்காகத் தேனி வந்திருந்தார். அந்திசாயும் வேளையில் பருத்திக்காட்டுக்குள் தந்தை தன் மகளை உப்புமூட்டை சுமந்து செல்வது போன்ற சில்-அவுட் ஷாட் எடுத்து முடித்துவிட்டு வந்தார். ஒளிப்பதிவாளர் சுகுமார் வாங்க பேசலாம் என உற்சாகத்துடன் அழைத்த அவரிடம் … Read more

இனி மாதுளை பழத்தின் தோலை தூக்கி வீசாதீங்க! இந்த நோய்கள் எல்லாம் போக்கும் அற்புத பயன்கள் ஒளிந்துள்ளதாம்

 பொதுவாக மாதுளை பழத்தை வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, அதனுடைய தோலை தூக்கி வீசி விடுவோம். ஆனால் தூக்கி ஏறியும் தோலில் கூட அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை கழுவி நன்கு சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, அதை பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை பல்வேறு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்நீரில் கலந்தோ பாலில் கலந்தோ குடிக்கலாம். அல்லது வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்குப் பதிலாக இந்த … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 6 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலகம்  வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை … Read more