ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு: பள்ளிக்கல்வி துறை

சென்னை: தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு வரும் 11 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 11-ம் தேதி நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: இருதரப்பு வர்த்தகம், உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு, தற்போது மீண்டும் ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார். குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது, இந்தியாவிற்கும்-ரஷ்யாவிற்கும் இடையில் பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. … Read more

தஞ்சை அருங்காட்சியகத்தில் மாயமான முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து 2005-ல் மாயமான தமிழில் முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட சிறப்புக்குரிய பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் ஓலைச் சுவடிகள் காகிதச் சுவடிகள் உள்ளன. இதில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் … Read more

வாழ்த்துகள்.. நடிகராக நம்பி நாராயணனுக்கு மாதவன் செய்த மிகப்பெரிய தியாகம்!

யாரோ விரித்த சதியின் வலையில் சிக்கி தேச துரோகி என்ற பட்டத்தை சுமந்த ஒரு மாபெரும் மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகின் முன் எடுத்துக்காட்ட நினைத்த மாதவனின் அந்த நேர்மையான எண்ணம் படத்தில் தெரிகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்ட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாதவன் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கான ஒட்டுமொத்த விடையும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். ஆமாம், … Read more

சினிமா ஆகிறது செஞ்சிக்கோட்டை மர்மங்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்கிரீன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஏலியன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் செஞ்சி. கணேஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த கெசன்யா என்கிற மாடல் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குனர் கணேஷ் சந்திரசேகரும் நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது : செஞ்சி என்கிறபோது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வருகிறது. செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் நினைவிற்கு … Read more

தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில், சிங்கப்பூர் நிறுவனமான IGSS வென்சர்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கும், தமிழக அரசுக்கும் இடையே செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்ப பூங்க அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இது உள்நாட்டு தேவையினை பூர்த்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும். ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள் 300 ஏக்கரில் செமிகண்டக்டர் பூங்கா எல்லாவற்றிற்கும் மேலாக இதன் … Read more

சென்னை மக்களே உஷார்.. சனிக்கிழமை பல இடங்களில் மின்வெட்டு!

சென்னையில் சனிக்கிழமை (ஜூலை: 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பூர், மாதாவரம், எண்ணூர், வியாசர்பாடி, கே.கே நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை: தம்புசெட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, … Read more

#BigBreaking || எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்… சற்றுமுன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்பு மனு.!

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேற எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவில், “முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். கட்சியில் முடிவெடுக்கும் உரிமை தற்போது பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் அமைந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற … Read more