நுபுர் ஷர்மா: “உச்ச நீதிமன்ற கருத்து; பாஜக வெட்கித் தலைகுனிய வேண்டும்!" – காங்கிரஸ்

கடந்த மாதம் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில். கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அவரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கன்ஹையா லால் … Read more

ரோந்து பணியில் இருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்கள்.. காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை, சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். அவிநாசி காவல் நிலைய காவலர்கள் அவிநாசி – முத்துச்செட்டிபாளையம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பதிவு எண் இல்லாத ஒரு பைக்கில் வந்த 3 பேரை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை காவலர்கள் விரட்டி பிடித்த போது பைக்கில் இருந்த ஒருவன் … Read more

திருவண்ணாமலையில் இதுவரை 874 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874.25.70 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 1,424.77.30 ஹெக்டேர் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, இந்து சமய அறநிலையத் … Read more

மெக்சிகோ: முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்

சான் பெட்ரோ ஹவுமெலுலா: மெக்சிகோ நகரின் மேயர் ஒருவர், முதலையை திருமணம் செய்து கொண்ட விநோத நிகழ்வு நடந்துள்ளது. மத்திய மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இதன் மேயர் விக்டர். இவர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமண நிகழ்வின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணத்தில் முதலை கிறிஸ்துவ முறைபடி வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தது. மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் … Read more

கொரோனா இன்னும் முடியல; 110 நாடுகளில் பாதிப்பு உயர்வு – எச்சரிக்கும் WHO

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், 110 நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் … Read more

மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விலை

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, எரிவாயுவின் விலையை மீளவும் அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.  200 ரூபாவால் அதிகரிக்கப்படும் விலை மீண்டும் எரிவாயு கொள்கலன்கள்  விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்கமைய, கொள்கலன்  ஒன்றின் விலையை 5,100 ரூபா … Read more

பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு.. இணைய சேவை முடங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக செல்போன் மற்றும் இணைய சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது குறித்து கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார். Source link

சட்டவிரோத பண பரிமாற்றம் : அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவர் கைது..!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வர்த்தக கூட்டாளிகளான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயினை, அமலாக்க துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். Source link

நுபுர் சர்மாவின் வார்த்தைகள் தேசத்தையே தீக்கிரையாக்கி விட்டது! மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கடும் கண்டனம்

முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. கடந்த மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அவர் கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின்போது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவின் பல இடங்களில் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தன. நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு … Read more

சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை:  சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 25,600 கோடி மதிப்பீட்டில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் இடையே உயர் தொழில் … Read more