Month: July 2022
மாயோன் இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி, கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் வெளியான படம் மாயோன். பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகி இருந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலி பரிசளித்தார். இந்த படம் வருகிற 7ம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more
பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது. ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய … Read more
நாவில் எச்சில் ஊர வைக்கும் வெங்காயச் சட்னி இப்படி செஞ்சு பாருங்: இந்த டேஸ்ட மறக்கவே மாட்டீங்க
நாம் பல வித கூட்டு, சாம்பார் என்று இட்லி தோசைக்கு பலவிதமான சைடிஷ் செய்தாலும் இந்த சட்னி போல் வருவதில்லை. இந்திய சமையலில் சட்னிக்கு தனி இடம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சட்னியை வித்தியாசமாக செய்வார்கள். தேங்காய், பொதினா, வேர்கடலை, கொத்தமல்லி, மாங்காய் என்று பல வித சட்னிகள் இருக்கிறது. இதில் நாம் வெங்காயச் சட்னிதான் எப்படி செய்வது என்றுதான் பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு, எண்ணெய், உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், கருவேப்பில்லை, … Read more
கிராமப்புற துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு புது வேலைவாய்ப்பு.!!
கிராமப்புற துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமாரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : கிராமப்புற துறை பணியின் பெயர் : பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் … Read more
ம.பி: 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், நாராயண்புரா பதர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன் திபேந்திரயாதவ் (வயது 5). இந்த சிறுவன் தன் குடும்பத்தினரோடு வயல்வெளிக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு திறந்தவெளியில் கிடந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் தவறி விழுந்தான். சிறுவனைக் கானாமல் குடும்பத்தினர் அகம், பக்கத்தில் தேடியிருக்கின்றனர். அப்போது ஆழ்துளை கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதால், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குடும்பத்தாருக்கு தெரியவந்தது. அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த … Read more
வந்தவாசி அருகே வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் – வீடியோ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. தெள்ளார் பகுதியில் உள்ள ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்ற நிலையில், வணிகவியல் துறை மாணவர்களும், வேதியியல் துறை மாணவர்களும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். வகுப்பறைக்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து அறிந்த பேராசிரியர்கள், மாணவர்களை அப்புறப்படுத்தினர். கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்பாக இரண்டு துறை மாணவர்கள் இடையே இருந்த … Read more
“ஆசிரியர்களை மதித்தால் உயரலாம்… நானே உதாரணம்” – மாணவர்களுக்கு அமைச்சர் கணேசன் அறிவுரை
கடலூர்: “மாணவரை முட்டிப் போட வைத்தால், ஆசிரியர் கோர்ட்டுக்கும் போகும் நிலை உள்ளது” என்று என்று வழிகாட்டி நிகழ்வில் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் திருப்பாதிருப்புரியூர் புனித வளனார் பள்ளியில் இன்று நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ எனும் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கான நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் … Read more
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் … Read more
லாப் எரிவாயு நிறுவனம் தற்போது வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்
லாப் எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அறிவித்தல் விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவானவற்றை தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச … Read more