பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 4-வது முறையாக உயர்வு.!

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 14 முதல் 19 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல், அந்நாட்டு மதிப்பின்படி, 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் ஹை ஸ்பீடு டீசல் 276 ரூபாய் 54 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, பிணை எடுப்பு திட்டத்தை மீண்டும் துவங்க, IMF உடன் செய்த ஒப்பந்தத்தின் கீழ்,பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை 4-வது முறையாக உயர்த்தியுள்ளது. Source link

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பி.சி.ராயின் பிறந்த நாள் தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்களைக் காக்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தம் கடின உழைப்பால் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் தொண்டு பற்றிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். Source link

'கதை வசனம் மட்டும் போதாது…' 'டைரக்டர்கூடவே இருக்கணும்…'

சேகர் : சினிமாவிலே நிலைமை எப்ப. எப்படி மாறும்னே சொல்ல முடியாது… விசு : கரெக்ட்! ஒரு படத்துக்கு ஒப்புக் கிட்ட நாளிலிருந்து படம் ரிலீஸாகும் நாள் வரை என்ன வேணுமானாலும் நடக்கலாம். நம்ம மார்க்கெட் நல்லா யிருக்கிற போது புக் பண்ணி, நடுவிலே நீங்க ரெண்டு படம் ஊத்திட்டீங்கன்னு வெச்சிக்குங்க – நான் ஊத்தியிருக்கேன் அந்த மாதிரி நிலையிலே ஜாக்பாட் சீனுவாசன் மாதிரி ஒரு தயாரிப்பாளர் எனக்குக் கிடைக்கலேன்னா இன்னிக்கு நான் இந்தத் தொழில்லே இருந்திருக்கவே … Read more

நான்கு பந்துகளில் இலக்கை எட்டிய அவுஸ்திரேலியா! இலங்கை அணியின் கனவை நொறுக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள்

காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்தது. காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 321 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. தொடக்க வீரர்களான நிசங்கா, கருணாரத்னே ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்துவீச்சின் ஆதிக்கத்தில் இலங்கை அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. குசால் மெண்டிஸ் 8 ஓட்டங்களில் லயன் … Read more

‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில்  கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது. சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் ‘டிபேட்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி … Read more

கும்பகோணதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொலை: 4 பேர் கைது

கும்பகோணம்: பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி புண்ணியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் மர்மநபர்களால் புண்ணியமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார். புண்ணியமூர்த்தி கொலை வழக்கில் ஜீவானந்தம், பிரகாஷ், தமிழ்வாணன், கொற்கை ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. 

புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி :புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் … Read more

`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து

“இந்தியாவில் சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட நாளும் ஒரு முக்கியமான தினம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தின விழா, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு – புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரிக்கான தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சௌத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பாக … Read more

'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால், தான் எந்த கருத்தை கூறினாலும் அந்த அதிகாரம் தனக்கு கைக்கொடுக்கும் என நுபூர் ஷர்மா நினைத்தாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். பாஜகவின் நுபூர் சர்மா முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவிலும் பல இடங்களில் போராட்டங்களும், கலவரமும், வன்முறையும் வெடித்தது. இதனை தொடர்ந்து நுபூர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் … Read more

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகினார் நெஞ்சுக்கு நீதி நடிகை – என்ன காரணம் தெரியுமா?

நடப்பு ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த ஷிவானி ராஜசேகர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகையான ஜீவிதா ராஜசேகரின் மகளான ஷிவானி ராஜசேகர் தமிழில் ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் நெஞ்சுக்கு நீதி படத்தின் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஏற்கெனவே ஃபெமினா மிஸ் தமிழ்நாடு அழகிப் … Read more