'சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது' – ஜி ஜின்பிங்

சீனாவுடன், ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுக் கொண்டார். நிகழ்வில் ஜி ஜின்பிங் பேசியதாவது, “சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது. ஹாங்காங் என்றுமே என் மனதில் இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகிவிட்டார்கள். பல … Read more

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளில், 5வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டில், கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. அங்கு சித்தாந்த ரீதியில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியை வைத்துக் கொண்டு, 12 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர், பெஞ்சமின் நேதன்யாகு. இவர் லிகுட் கட்சியின் தலைவர் ஆவார். இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 … Read more

புதிய தொழிலாளர் நல கொள்கைகளின் மாற்றங்கள் இன்று முதல் அமல்.!

புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை இருந்தாலும் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற பழைய நடைமுறை தொடருகிறது. அதாவது, ஊழியர்கள் தினமும் 8 மணி நேரத்திற்குப் பதில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களின் மொத்த  ஊதியத்தில் 50 சதவிகிதம் … Read more

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்

மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகமுள்ளதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, தொழிலதிபர் வித்யாசாகரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியின் மகள் நைனிகா தெறி எனும் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து, மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, இறுதி … Read more

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு. அவரது தலைமையின் கீழ் கூட்டுறவுத்துறையில்  பல மோசடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கூட்டுறவுத்துறையின் ஊழல்கள் கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியாசமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு!!

சென்னை : லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கோரிக்கையை 2வது முறையாக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மனு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக, அறப்போர் இயக்கம் பதில் அளிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.

தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் :நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!!

டெல்லி : நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. … Read more

புதுச்சேரி அப்போலோ புரோட்டான் சென்டருக்கு சிறப்பு மருத்துவர் வருகை| Dinamalar

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை சிறப்பு மருத்துவர் காதர் உசைன், நாளை 2ம் தேதி வருகை தருகிறார். அங்கு, நாளை காலை 10.௦௦ … Read more

ஆந்திர அரசியலில் குதிக்கிறாரா விஷால்?

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா மூலம் தான் வளர்ந்தார். இவரது படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பு பெறுகிறது. நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஷால் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றினார். இந்த வெற்றிகள் கொடுத்த உத்வேகத்தால் அரசியலிலும் குதித்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் … Read more

பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை காரணமாக காகித உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து உள்ளதாக கருதப்படுகிறது. பிளாஸ்டிக் தடை ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய … Read more