புதிய பஸ் கட்டணம் இன்று முதல் அமுல்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 22 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார். பஸ் கட்டண மறுசீரமைப்பு தேசிய கொள்கைத் திட்டத்திற்கமைய வருடாந்தம் ஜுலை மாதம் 1ம் திகதி கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. புதிய கட்டண மறுசீரமைப்பின்படி 22 வீதத்தினால் பஸ்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறுந்தூரத்திற்கான ஆகக்குறைந்த கட்டணம் … Read more

இந்தியாவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் தேவையா?

இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவில்  5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் நெட்வெர் சேவை கிடக்கவும். அதேவேளையில் தரமான பேண்ட்  வித் (band width ) கிடைக்கவு, நல்ல வேகமாக நெட்வொர்க் கிடைக்கவும் 5 ஜி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. கேஜட்ஸ் சந்தையில் 5 ஜி போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், கேஜட்ஸ் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இதை வாங்க தொடங்கி … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திடீர் திருப்பம்…! ஒரு கை பார்த்து விடலாம்… அடித்து களமிறங்கிய எடப்பாடி கே பழனிச்சாமி.!

பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே வருகின்ற ஜூலை 11 ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயற்சி செய்து கொண்டு வருகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவெட் மனுவை தாக்கல் செய்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளது.  மேலும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுக்கு … Read more

வடலூர்: `வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது!’ – தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதி மன்றம்

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் சத்தியஞான சபை. வள்ளலாரின் கொள்கைக்கு மாறாக அங்கு சிவலிங்கம் போன்ற தெய்வங்களை வைத்து சிலர் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர்குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தொண்டர்குல பெருமாள் கடந்த 2006-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதையடுத்து “வள்ளலார் கடந்த 1872-ம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி சத்தியஞான … Read more

தனியாக வசித்து வந்த தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் கொள்ளை..! 140 சவரன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 140 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகளான அருணாச்சலம் மற்றும் ஜாய் சொர்ண தேவி தனியாக வசித்து வரும் நிலையில், நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த மங்கி குல்லா அணிந்திருந்த 3 மர்ம நபர்கள், ஜாய் சொர்ண தேவியையும், … Read more

சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனை | 7 நாளில் 38 வழக்குகள் பதிவு; 54 பேர் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 38 வழக்குகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், 54 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) … Read more

மகாராஷ்டிராவில் நடந்த திருப்பம்: முதல்வர் பதவியை மறுத்த பாஜக தலைமையின் கணக்கு: பட்னவிஸ் துணை முதல்வர் ஆனது ஏன்?

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக தலைமையின் சில அரசியல் மற்றும் சாதிய கணக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்து வந்த அரசியல் திருப்பங்கள் முடிவுக்கு வந்து முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதன் பிறகு எதிர்பார்க்கப்பட்டது போலவே பாஜக- அதிருப்தி சிவசேனா … Read more

Nupur Sharma: செய்தித் தொடர்பாளர்னா இப்படி இருக்கணும்.. பாஜகவிலேயே நல்லுதாரணமும் இருக்கு!

“ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா.. அதிகாரம் கையில் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச முடியுமா”… என்று பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை வெளுத்து வாங்கியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. இதே பாஜகவில் அருமையான செய்தித் தொடர்பாளரும் இருந்துள்ளார்.. அவரும் பெண்தான்.. அதை விட முக்கியமானது, அவர்தான் ஒரு தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளரும் கூட.. மறைந்த சுஷ்மா சுவராஜ்தான் அவர். செய்தித் தொடர்பாளர் என்பவர் … Read more

Motorola: மோட்டோ அறிமுகம் செய்யும் 2 போன்கள்; ஒன்றில் 200MP கேமரா கொடுக்கப்படுமாம்!

Upcoming Motorola Phones July 2022: மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ஸ்னாப்டிராகன் 680 புராசஸர், அமோலெட் டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ள இந்த மொபைல், ஜூலை 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. அதோடு நின்றுவிடாமல், இம்மாதம் வேறும் இரண்டு போன்களையும் நிறுவனம் களமிறக்குகிறது. மோட்டோ ஜி62 5ஜி, மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் இம்மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Motorola … Read more

மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.   எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பல தொழிற்துறைகள் முடங்கியுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்பனை செய்யும் நடைமுறையும் வெகுவாக அதிகரித்துள்ளது.   2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் இந்த நிலையில், கலன் பிந்துனு பிரதேசத்தில் பெட்ரோல் போத்தல் ஒன்று 2500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக விலைக்கு … Read more