INDvsENG 5th Test: பும்ரா கேப்டனாக… டாப் ஆடரில் புஜாரா… அஸ்வினுக்கு பதில் ஜடேஜா?

India vs England 2022, 5th Test, live score Updates in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியானது 2021-ம் ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டதாகும். அப்போது நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் … Read more

#BREAKING ||  இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.! 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமை செயலத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படும் நடவடிக்கையைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் உருப்படியாக இன்று முதல் … Read more

டிஜிட்டல் தலையங்கம்: பிளாஸ்டிக் அரக்கனை வேரறுப்போம்!

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை அமலாகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே வெவ்வேறு அளவில் இதுபோன்ற தடைகள் இருந்தாலும், பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்தது. அதனால் தடையை முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் இருந்தது. இப்போது பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைப்பது, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு என்று … Read more

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்காலிகமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

மத அடிப்படைவாதம் இருபுறமும் கூர்மையுள்ள கத்தி: வைகோ கருத்து

சென்னை: “மத அடிப்படைவாதம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது என்பதை மதவெறியர்கள் யாராக இருந்தாலும் உணர வேண்டும். சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவைக் கண்டித்து உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கொதித்து எழுந்தன. இந்தியா … Read more

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: “முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி … Read more

'நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்!'- உச்ச நீதிமன்றம் காட்டம்!

நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தனர். இது அரபு நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பாஜகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து இருவரையும் நீக்கி, அக்கட்சித் தலைமை … Read more

அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல்; 17 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒன்பது அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஒடேசா பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பெல்கோரோட் – டினீஸ்டர் கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் உருக்குலைந்து போனது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாள் இந்த … Read more

நாட்டுமக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும்… உச்சநீதிமன்றம் அதிரடி

முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நுபுர் ஷர்மா மன்னிப்பு கோருவதாவும், தமது கருத்துக்களை அவர் திரும்ப பெறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரான நுபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தொலைக்காட்சியில் தோன்றி நுபுர் ஷர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது.  நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது. … Read more

கொரோனா அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தைத் தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கொரோனாவில் 4வது அலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தொற்று பரவலை … Read more