காணாமல் போன வியாபாரி: எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை கடை வியாபாரியான இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தோஷ்குமார் காணாமல் போயிருக்கிறார். அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் கடைசியில் பொலிசில் புகார் அளித்தனர். அதன் பின்னர் கெடிலம் … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச ராஜ்பவனுக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். நிலுவையிலுள்ள மசோதாக்களை ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளது. நாளை முதல் தொடங்கவிருந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் 3,4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை சபாநாயக்கர் பதிவிக்கான வேட்புமனு தாக்கல் நடக்கும் என்றும் நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் – முடக்கிய வருமான வரித்துறை

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின் முடிவில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்திருந்தது. அதன்பேரில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வருகிறது. … Read more

2 ஆண்டுகள் இடைவெளி – கோலாகலமாக தொடங்கிய பூர் ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இது 42 நாட்களுக்கு நடக்கும் மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட … Read more

அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி சிவசேனா கட்சி மனு அளித்த நிலையில், அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய கூட்டணி அரசுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே உள்பட போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அளித்தார். இதற்கு எதிராக … Read more

முதல்நாளே இப்படியா? பாவம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 540 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டின் முதல் வர்த்தக நாளில் எதிர்பார்க்கப்பட்டத்தை போலேவே சரிவுடன் துவங்கியுள்ளது, இதைவிட முக்கியமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 79 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது. இதைத் தாண்டி அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் தாக்கத்தால் இந்திய சந்தையில் இருந்து முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பெரிய ஓட்டையை உருவாக்கியுள்ளது. இந்த … Read more

அடுத்த வார அமர்வு: 4,5 மற்றும் 06ம் திகதிகளில் 

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4,5 மற்றும் 06ம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (30) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.   • நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் 6ஆம் திகதி  பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக எதிர்வரும் … Read more

இது சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.. அதுக்கு பதில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

கொழுப்பு சத்து நமது உடலுக்கு தேவையான ஒன்று. இருப்பினும் ரத்ததில் கொழுப்பு சதவிகிதம் உயர்ந்தால், அது பல்வேறு நோய்களை உருவாக்கும். ஒரு வருக்கு கொலஸ்ட்ரால் இருந்தால், அவருக்கு இருதய ரத்த குழாய்கள் பாதிக்கும் நோய் வர வாய்ப்பிருக்கிறது. நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் மேலும் நமது வேலைகளில் ஏற்படும் மாற்றம் நமது ரத்தில் உள்ள கொழுப்பு அளவில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் சாப்பிடும் சில  உணவுகள் ரத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது.இந்நிலையில் நாம் சாப்பிடும் … Read more

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ‌.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் … Read more