மலேசிய வானில் ஒளிர்ந்த சீன ராக்கெட் குப்பை: மிரளவைக்கும் வீடியோ காட்சிகள்!

 சீன ராக்கெட் லாங் மார்ச் 5பி-யின் குப்பைகள் மலேசியாவின் இரவு நேர வானத்தை ஒளிரச் செய்தது தொடர்பான வீடியோக்கள் அந்த நாட்டின் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறி பூமியின் ஈர்ப்பு விசைகளுள் நுழைந்ததை தொடர்ந்து, ராக்கெட்டின் பாகங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தாக அமெரிக்க விண்வெளிக் நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ராக்கெட் பாகங்கள் வான்பாதையில் நுழைந்த … Read more

கருணாநிதி நினைவு தினம் : சர்வதேச மராத்தான் போட்டி

சென்னை முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் வரும் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.  இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் இணையம் மூலம்  பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 50000க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.  இந்த போட்டி சென்னை பெசண்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை … Read more

காமன்வெல்த் போட்டி: அரையிறுதியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி

பிர்மிங்காம்: டேபிள் டென்னிஸ் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பிர்மிங்காமில் நடந்த ஆடவர் டேபிள் டென்னிஸ் காலிறுதி ஆட்டங்களில் 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்; அதிமுக இரண்டு பிரிவுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு: 2 மணி நேரத்தில் நடந்தது என்ன? எடப்பாடி தரப்பு அதிர்ச்சி

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் … Read more

மகளிரை உற்சாகப்படுத்த நெல்லையில் நடைபெற்ற மகளிர் அழகிப் போட்டி

பாளையங்கோட்டையில் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நலச் சங்கத்தின் சார்பில் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் மெகந்தி, மேக் அப் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட … Read more

அதிகார துஷ்பிரயோகம்: அரசு அதிகாரி சஸ்பெண்ட்| Dinamalar

தெலுங்கானாவில், அமைச்சரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காதவர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பிய நகராட்சி கமிஷனர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவில், நகராட்சி துறை அமைச்சரும், முதல்வரின் மகனுமான ராமராவின் பிறந்த நாள் விழா, 24ல் நடைபெற்றது. இதில், நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் கங்காதர் தெரிவித்துள்ளார். ஆனால், நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்கவில்லை. கங்காதர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ராமராவ், … Read more

காரில் புட்போர்டு அடித்த ரம்யா கவுடா! அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கவுடா. தற்போது 'அபியும் நானும்' என்கிற தொடரில் வாத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழக இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து வரும் ரம்யா, ரசிகர்களை கவர சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக போட்டோஷூட், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார். தற்போது விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ள ரம்யா, பனிமூடியிருக்கும் சாலையில் வேகமாக பயணிக்கும் காரிலிருந்து, ஜன்னல் வழியே உடம்பை வெளியே நீட்டி ரசித்து மகிழ்கிறார். காற்றில் அவரது நீளமான … Read more

பிரதமர் மோடியால் தான் மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் – பிரதமருக்கு புகழாரம் சூட்டிய பீகார் மந்திரி!

பாட்னா, பிரதமர் மோடி செயல்படுத்திய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை காரணமாகவே மக்கள் உயிர்பிழைத்திருக்கின்றனர் என்று பிரதமருக்கு பீகார் மாநில மந்திரி ஒருவர் புகழாரம் சூட்டினார். பீகார் மாநில மந்திரி ராம் சூரத் ராய் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும், அவர் கொரோனா தொற்றுநோய்களின் போது தடுப்பூசியை உருவாக்கி, இலவசமாக தடுப்பூசியை வழங்கினார்” என்றார். மேலும் … Read more

காமன்வெல்த் போட்டி : இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம் – பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா தங்க பதக்கம் … Read more

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு..!

கராச்சி, பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more