“தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் துணைமுதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை” – சொல்கிறார் சரத் பவார்

மகாராஷ்டிராவில் நேற்று புதிய அரசு பதவியேற்றது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற நிலையில், தான் அமைச்சரவையில் இடம் பெறமாட்டேன் என்று சொன்ன தேவேந்திர பட்னாவிஸ் பின்னர் மனதை மாற்றிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெறுவதாக அறிவித்தார். அதோடு துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார். பாஜக தலைவர்கள் ஜே.பி நட்டா, அமித் ஷாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “துணை முதல்வர் … Read more

மாணவர்கள் தற்கொலை தொடரக்கூடாது; நீட் தேர்வுகு உடனடியாக விலக்கு பெறவும்: அன்புமணி

சென்னை: நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். … Read more

அமர்நாத் யாத்திரை பாதைக்கு அருகில் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழப்பு

குல்காம்: காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் மிர் பஜார் அருகில் உள்ள நவபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு உள்ளூர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. அந்த யாத்திரை செல்லும் பாதைக்கு அருகில் நவபோரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை … Read more

சட்டசபைக்குள் ஷிண்டேவை அனுமதிக்காதீங்க..! – உச்சநீதிமன்றத்தில் தாக்கரே மனு!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் … Read more

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் துவிசக்கர வண்டிகள்

இலங்கையில் தற்போது சாதாரண துவிசக்கர வண்டி ஒன்று ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.   அத்துடன்,  புதிய வடிவிலான துவிசக்கர வண்டிகள் ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.   எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு  கடும் சிக்கலில் மக்கள்  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக முழு இலங்கையிலும் உள்ள மக்கள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.  குறிப்பாக போக்குவரத்து சார் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இவ்வாறான … Read more

ரஷ்ய படைகள் வசம் சென்றது சிவியரோடோனெட்ஸ்க் நகரம்..! பாதாள அறைகளில் பதுங்கிய உக்ரைனியர்கள் வெளியே வரத் தொடங்கினர்

சிவியரோடோனெட்ஸ்க் நகரை ரஷ்ய படைகள் முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு போர் ஓய்ந்ததால், பாதாள அறைகளில் பதுங்கி இருந்த மக்கள் வெளியே வரத் தொடங்கி உள்ளனர். ஒரு லட்சம் மக்கள் வசித்த சிவியரோடோனெட்ஸ்க் நகரம் ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. 2 மாதங்களாக குடிநீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இன்றி தவித்த மக்கள், இடிபாடுகளில் இருந்து தங்கள் உடமைகளை மீட்க பாதாள அறைகளை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளனர். Source link

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகவுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக்கோரி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், விசாரணை அலுவலகம் முன் தொண்டர்கள் குவிய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். Source link

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி

கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 28) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31). பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. இந்நிலையில், ஹவ்ஸியாவின் கணவர்தான் அவரை … Read more

ஜூலை 5ந்தேதி தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை  கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு தேர்தலின்போது  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மக்கள் … Read more

தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.