'நுபுர் சர்மாவும் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது': உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது; அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

காவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!

ஜூலை 6ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. மேகதாது அணை விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை அமைக்க கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் … Read more

அட்லி – ஷாருக்கானின் 'ஜவான்' – இத்தனை கோடிக்கு வாங்கியதா OTT நிறுவனம்?

‘ஜவான்’ படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடித்து வருகின்றனர். முதன்முறையாக நயன்தாரா பாலிவுட் படத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் … Read more

இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!

உலக நாடுகள் அனைத்தும் பணவீக்க உயர்வுக்கும், நாணய மதிப்பு சரிவுக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை மட்டுமே முக்கியக் காரணமாகக் கூறினாலும், ரஷ்யா எதையும் கண்டுகொள்ளாமல் அனைத்து துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துகொண்டு வருகிறது. இதன் வாயிலாக ரஷ்யாவின் நாணய மதிப்பு கடந்த 7 வருடத்தில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்தது. இப்படியிருக்கும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த கடுமையான தடைகளை மொத்தமாக ஓரம் கட்டி தனக்கெனப் புதிய வர்த்தகப் பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஜூலை … Read more

யாழ் – கொழும்புக்கிடையில் ,அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்காக புகையிரத சேவையை பயன்படுத்த திரு அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

யாழ் – கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை … Read more

‘என் உடல் இப்போது சரியாக இல்லை’: மோசமான ஹார்மோன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன், தான் மோசமான சில ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் கூறினார். அப்போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடனான தனது போராட்டத்தைப் பற்றி அவர் வெளிப்படுத்தினார் “என்னுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். எனது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன் – சமநிலையின்மை, வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் இது ஒரு கடினமான போராட்டம் என்பதை பெண்கள் அறிவார்கள். ஆனால் அதை ஒரு … Read more

#BigBreaking || தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.! சற்றுமுன் இடைக்கால தடை உத்தரவு….!

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது, இதை ஏற்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு … Read more

விழுப்புரம்: தனிநபர் இடத்தை அபகரிக்க முயன்றாரா மாவட்ட சேர்மன் – இருதரப்பும் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட தென்னமாதேவி கிராமத்தின் முக்கிய சாலை ஓரமாக இருக்கும் 36 சென்ட் இடத்தை விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் (மாவட்ட சேர்மன்) அபகரிக்க முயன்று வருவதாக கூறி, கனகராசு என்பவர் 29.06.2022 அன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை அளித்த கனகராசுவிடம் பேசினோம். “அந்த இடம் மொத்தம் 20 ஏக்கர் 49 சென்ட். அதில், 7 ஏக்கர் 77 சென்ட் நிலத்தை … Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Source link