ட்விட்டரில் தனது கட்சிப் பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் கடந்த வாரம் … Read more

உதய்பூர் படுகொலை | ஐஜி, எஸ்.பி., உள்பட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து … Read more

ராணுவப் படை குவித்தால் பதிலடி தரப்படும் – புதின் எச்சரிக்கை

நேட்டோவில் சுவீடன், பின்லாந்து இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை என தெரிவித்த அதிபர் புதின், ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ, ராணுவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தினாலோ பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பகுதிகளுக்கு அதே அளவிலான அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் என்றார்.. Source link

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டு தேர்தலின்போது சமர்பித்த பிரமாண பத்திரத்தில், சரத் பவாரின் சொத்து மதிப்பு ஆறு ஆண்டுகளில் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 32 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்க கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அது குறித்து சரத் பவார் கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

எம்.பி.க்களின் கடந்த 5ஆண்டு ரயில் பயண செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம்வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது … Read more

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரி உயர்வு: ஒன்றிய அரசு

டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5%-லிருந்து 12.5% ஆக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்திய செலவணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரி உயர்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு: ஒன்றிய அரசு

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி ஒன்றிய அரசு விதித்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பெட்ரோலுக்கு ரூ.6, டிசல்க்கு கூடுதலாக ரூ.13 வரி செலுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

`ஆட்டோ ஓட்டுநர் டூ முதல்வர்'- பிளான் போட்டு மகாராஷ்ட்ரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் 20-வது முதல்வராக பதவியேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. ஆட்டோ ட்ரைவராக இருந்து தன் பொதுவாழ்வை தொடங்கிய இவர், முதல்வராக கடந்து வந்த பாதையை இங்கே பார்க்கலாம்! பிப்ரவரி 9, 1964-ல் மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிறுவயதில், மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்துள்ளனர். வறுமையினால் பதினோராம் வகுப்பு வரை மட்டுமே படித்த … Read more

ஒரு நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூன் 30) 18,819 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து தொற்று எண்ணிக்கை 17,070 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,070 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,69,234 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 14,413 … Read more

இன்று முதல் பிளாஸ்டிக் தடை.. அப்ப ‘இந்த’ பொருட்களின் விலை ஏறுமா?

இன்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக குளிர்பான நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிர்பானங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் ஜூலை 1ல் இருந்து சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் தடை? பிளாஸ்டிக் தடை ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது என … Read more