32 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதல் 7,500 ரூபா, நெருக்கடியால் பாதிக்கப்பட்வர்களுக்கும் விரைவில் நிவாரணம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ,பாதிக்கப்பட்டுள்ள  32 லட்சம் குடும்பங்களுக்கு இன்று  முதல் 7,500 ரூபாவை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் மேம்பாட்டுக்காக பங்களிப்பை வழங்கிவரும் 15 இலட்ச அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சமான  ஓய்வூதியம் பெறுவோருக்கும் ,கைத்தொழில் துறையைச்சார்ந்த மற்றும் ஏனைய தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும் ,எதிர்வரும் காலங்களில் நிவாரணம் தற்போது முன்னெடுக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பிரதி பலனாக கிடைக்கக்கூடியதாக … Read more

Tamil news today live: ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிய இபிஎஸ்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 40 -வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பான் – ஆதார் இணைக்காவிடில் இன்று முதல் அபராதம் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் வசூலிக்கப்படும்.  பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி … Read more

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது.!

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முழுவதும் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று பேரை போலீசார் விசாரணை செய்தனர். … Read more

கடைசி நேர ட்விஸ்ட்… முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக விட்டுக்கொடுத்தது ஏன்?!

மகாராஷ்டிராவில் திடீரென கடந்த 20-ம் தேதி சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனாவில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்திற்கு சென்று அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலம் சென்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்ததால் மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி உத்தவ் தாக்கரேயிக்கு உத்தரவிட்டார். ஆனால் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும் முன்பாக உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த … Read more

சசிகலாவின் ரூ.15 கோடி பினாமி சொத்து முடக்கம்..!

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.     Source link

பழனிசாமியை முதல்வராக்கியது பாஜக: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கருத்து

தூத்துக்குடி: ‘‘பழனிசாமியை பாஜகதான் முதல்வராக்கியது’’ என்று, தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார். திருச்செந்தூரில் அவர் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும். தலைவர்களின் மறைவுக்கு பின் ஏற்படும் இடைவெளியில் அதிமுகவில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். பின்னர் அது சரியாகிவிடும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை. பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜகதான். தொடர்ந்து எல்லா வகையிலும் … Read more

அடுத்தது என்ன?- ஆட்சியை இழந்த சிவசேனா முன் இருக்கும் சவால்கள்: ஒரு பார்வை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கவிழ்ப்பு சுமுகமாக நடந்தேறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே முதல்வராகிவிட்டார். அவர் வெற்றிகரமாக முதல்வர் பதவியைப் பெற்றார் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமா இல்லை பாஜக ஷிண்டே குழுவுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அதை தன் கைப்பாவையாக … Read more

கோவிட் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கோவிட் தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகள் சில உருவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் நான்காவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார். இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராகுங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கோவிட் திரிபுகள் இதுவரையில் இலங்கையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த … Read more

கோமாளிகள் போல் சென்று நோயாளிகளை குதூகலப்படுத்திய டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் குழுவினர்..!

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கோமாளிகள் போல் வேடமணிந்து சென்று நோயாளிகளை டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் என்ற அமைப்புக்குழுவினர் குதூகலப்படுத்தினர். புனித யோவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாவான சாவோ ஜாவோ-வையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். அவர்களுடன் நோயாளிகளும் இணைந்து பாட்டுப்பாடியும்,  நடமாடியும் மகிழ்ந்தனர்.   Source link

பி.பி.எப். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Puplic Provdient Fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7 புள்ளி ஒரு சதவிகிதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி ஆறு புள்ளி எட்டு சதவிகிதமாகும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link