தனக்கே தெரியாமல் பவுண்டரி அடித்த வீரர்! ஏமாந்துபோன இலங்கை கீப்பரின் வீடியோ

காலே டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் அடித்த வித்தியாசமான பவுண்டரியை பார்த்து இலங்கை வீரர்கள் ஆச்சரியமடைந்தனர். இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பு 313 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 77 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக அவர் இலங்கை சுழற்பந்து … Read more

ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி: பாவூர்சத்திரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலம் – ஜாய் சொர்ணாதேவியை கட்டிப்போட்டு ரூ.10 லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். கொள்ளையடித்து சென்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

டெல்லி : தொழிலாளர் நலன் தொடர்பான புதிய கொள்கைபடி, பணியில் இருந்து விடுபடும் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப் பலன்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் இடம் பெற உள்ளன. குறிப்பாக ஊழியர்களின் ஊதியம், அவர்கள் பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற உள்ளது. ஊழியர்களின் பணி சூழல், தொழிலாளர் நலன்,ஆரோக்கியம் மற்றும் … Read more

உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லாலை படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி ஆகிய இருவரையும் வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய இறை தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து … Read more

டேட்டிங் போறது எல்லாம் வேஸ்ட் பாஸ்.. இளம்ஜோடி செய்த வேலையை பார்த்தீங்களா..?

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவாக இருந்தாலும் இது பலருக்கு சாத்தியப்படுவதில்லை. கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய சேமிப்பு மட்டுமே சொந்த வீடு வாங்குவதற்கான இலக்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 19 வயது இளம்பெண் தனது காதலருடன் டேட்டிங் செல்வதற்கு பதிலாக பொறுப்புடன் இருந்து சொந்த வீடு வாங்கியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சொந்த வீடு வாங்க பணம் தேவையில்லை.. கோதுமை, பூண்டு இருந்தால் போதும்.. அட இது எந்த ஊர்ல..! … Read more

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 9

*காட்சி வன்முறை*நாம் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும் திடீரென ஒருவர் நம்மிடம் வந்து கேட்பார். ”கருப்பா, குட்டையா, கனமா, சுருட்ட முடி வச்சிருப்பாரே அவரத் தெரியுமா?” இன்னொருவர் நம்மை நைச்சியமாய்ப் பேசியோ, கையைப் பிடித்தோ கூட அழைத்துச் செல்வார். ”அஞ்சி நிமிசம் வாரீக, இருக்கீக, போறீக! காசொன்னும் குடுக்க வேண்டா!” வடிவேலு நகைச்சுவையைப் போலத்தான் இன்றைய விளம்பர உலகம் இருக்கிறது. அது விரிக்கும் வலையில் சிக்கிக் கொண்டால் பாதிப்புதான். விளம்பரங்கள் ஓயாமல் நம்மைத் துரத்துகின்றன. தொலைக்காட்சியில் விளம்பரங்கள். திரைப்படத்தில் … Read more

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல்.! இளைஞர் கைது.!

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சாக்கு பையுடன் வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 21 கிலோ எடையுள்ள 10 … Read more

வயிற்றில் இருந்து 233 பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!!

துருக்கியை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்த 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். துருக்கியை சேர்ந்த ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுக்கசொல்லியுள்ளனர். அவரும் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுத்து அவற்றை மருத்துவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவரது வயிற்றில், பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், … Read more

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பிரபல ரடிவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டார் (எ) சக்திவேல் (35) மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 2021 நவம்பர் மாதம் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்த அவர், … Read more