அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20… சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC 70 ரூபாய்க்கு பில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கினார். அந்த தேநீரின் விலை வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி … Read more

Doctor Vikatan: ஒருக்களித்துப் படுத்து தூங்குவதால் முக அமைப்பு மாறுமா?

என்னுடைய முகத்தில் இட, வலப் பக்கங்களை ஒப்பிடுகையில் லேசான வித்தியாசம் தெரிகிறது. ஒரு பக்க சருமத்தில் மட்டும் கோடுகளும் சுருக்கங்களும் தெரிவதைப் பார்க்கிறேன். தூங்கும் முறைதான் காரணம் என்கிறாள் என் தோழி. ஒருக்களித்துப் படுத்துத் தூங்குவதால் இப்படி ஏற்படுமா? இதை நிரந்தரமாக சரிசெய்ய ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா? face shape பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். “நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ஒரு பக்கமாகத் திரும்பி தூங்கும்போது, அந்தப் பக்கத்தில் ஏற்படும் அழுத்தம் … Read more

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று … Read more

உடுமலை அருகே நாட்டின் முதல் ‘ தென்னை மகத்துவ மையம் ' அமைப்பு

உடுமலை: உடுமலை அருகே நாட்டின் முதல்’தென்னை மகத்துவ மையம்’ அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அணையை ஒட்டி 102 ஏக்கர் பரப்பில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு சொந்தமான, செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணை உள்ளது. இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தரமான தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. அங்கு குட்டை, நெட்டை ரக, வீரிய ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்த … Read more

ஆந்திராவில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து – ஆட்டோவில் சென்ற 6 பெண்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 11 விவசாய கூலி தொழிலாளர்கள் நேற்று காலை ஒரு ஷேர் ஆட்டோவில் வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. ஆனால், 5 பேர் ஆட்டோவில் உடல் கருகியும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் உட்பட மீதியுள்ள 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக தாடிமர்ரி போலீஸார் மற்றும் மின்சார அதிகாரிகள் சம்பவ … Read more

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.!

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற நேட்டோ உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை அளிக்கும் என்றும், ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறாது என்றும் கூறினார்.  Source link

ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்!

ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் வெளியாகும் முதல் வாக்காளர் பட்டியல் இது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 அச்சிடும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Source link

குறைந்தது 7 மணிநேரம் தூங்குவது உங்கள் இதயத்திற்கு நல்லது!

தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவது உங்கள் இதயத்திற்கு நல்லது என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. போதுமான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அடிக்கடி கூறப்படுகிறது. இப்போது, ​​அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனும் (AHA) இதை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கிறது. இது ஆரோக்கியமான இதயம் மற்றும் மூளைக்கான முக்கிய அளவீடாக இருப்பது தூக்கம் தான் என AHA குறித்துள்ளது. AHA கடந்த புதன்கிழமை வெளியிட்ட அதன் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில், தூக்க கால அளவு அதன் இருதய சுகாதார … Read more

நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை இன்று முதல தண்டனைக்குரிய குற்றமாகும். தடை செய்யப்பட்ட பொருள்களில் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி :தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  2004ம் ஆண்டு தேர்தலின்போது சமர்பித்த வேட்புமனு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.