அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்

மும்பை : சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் இன்று பத்ரா சாவல் நிலமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம் என்றும் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‛ஹெல்மெட், வேகக் கட்டுப்பாடு வாயிலாக 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, ‘சீட் பெல்ட்’ அணிவது ஆகியவற்றின் வாயிலாக, இந்தியாவில், ஒரு ஆண்டில், 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மருத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும், ‘லான்செட்’ இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:உலகெங்கும், ஒவ்வொரு ஆண்டும், 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்.அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளை … Read more

உண்மையான தகவல்களை மக்கள்மயப்படுத்துவது பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் பொறுப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்குப் பாராளுமன்ற முறைமை தொடர்பில் விசேட ஒரு நாள் செயலமர்வு (28) நடைபெற்றது. பாராளுமன்றம், வெகுசன ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கிடையில் வலுவான உறவை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில், பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மு.ப. 8.30க்கு செயலமர்வு ஆரம்பமாகியது. இங்கு ஊடகவியாளர்கள் மத்தியில் உரையாற்றிய சபாநாயகர், சட்டமியற்றும் உயர்ந்த நிறுவனமான பாராளுமன்றம் தொடர்பான அறிக்கையிடலில் … Read more

ஒசூரில் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்த 2,000 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்; காரணம் என்ன?

ஒசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியது: ஒசூரில் 2,000-கும் மேற்பட்ட குறு … Read more

தமிழகத்தில் இன்று முதல் இந்த சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாயாகவும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாயாகவும், பல அச்சு வாகனங்களுக்கு 234 ரூபாயிலிருந்து இலிருந்து 258 ரூபாயாகவும் … Read more

இன்று புதிய தொழிலாளர் விதிகள் அமல்… வாரம் 3 நாள் விடுமுறை!!

புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் … Read more

அதிமுக உடைந்தால் பாஜக-வுக்கு சாதகமா, பாதகமா?! – ஒரு விரிவான அலசல்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 22-ம் தேதி இரவு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை வரை ஓ.பி.எஸ் தரப்பு சட்டப் போராட்டத்தை நடத்தினர். இதன் பலனாக ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கக்கூடாது என்று தீர்ப்பைப் பெற்றது ஓ.பி.எஸ் தரப்பு… இதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தனர். இதற்குப் பொதுக்குழு உறுப்பினர்களும் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும்கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி … Read more

தமிழகத்தில் 2,381 அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்க உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் 2019-ம்ஆண்டு தொடங்கப்பட்டன. ஆசிரியர் பற்றாக்குறையால் இந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தன. இதையடுத்து, ‘‘அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த … Read more

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மற்றும் இம்பால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ராணுவ முகாம் மீது மண் சரிந்ததில் வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். … Read more