6 வயது சிறுமியையும், தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது. மன நலம் பாதிக்கப்பட்டதால் தாயால் வாக்குமூலம் தர இயலவில்லை. காவல்துறையினர் மின்னணு சாதனங்கள் ,கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும் 150  பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றி … Read more

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரச்சாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார். இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார். இதையும் படியுங்கள்: … Read more

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவது வழக்கம். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒப்பிட்டு அவர் சொன்ன கருத்து வைரலானது. இந்நிலையில், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தக்கடிதத்தில், ‘தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசி வந்தால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை மும்பை வெர் … Read more

மீண்டும் மிரட்டும் கொரோனா – பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர் சேர்க்கை, உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பணிகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் … Read more

மற்றொரு மகள், டிரைவர் தற்கொலை| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவில் தாய், மகள் கொலை செய்யப்பட்டனர். மற்றொரு மகள் மற்றும் அந்த வீட்டின் டிரைவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். மஹா., தலைநகர் மும்பையின் புறநகரான கண்டிவிலியில் உள்ள ஒரு வீட்டில் வசித்த கிரண் தல்வி,45, அவரது மகள் முஸ்கன்,26, இருவரும் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கிரணின் மற்றொரு மகள் பூமி, 17, மற்றும் அவர்கள் வீட்டின் டிரைவர் ஷிவ்தயாள் சென்,60, இருவரும் மற்றொரு அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். இதுகுறித்து … Read more

ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்கள்!

மகாராஷ்டிராவில் சில வாரங்களாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வியாழக்கிழமை அழைப்பு விடுத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. சிறிது நேரத்திலேயே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்களை இங்கே பார்க்கலாம். ஃபேஸ்புக் வழியாக பொதுமக்களுக்கு உரையாற்றிய உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி … Read more

இது சரியில்லை… திரும்ப பெருங்கள்… தமிழக அரசை ஆளும் திமுக கூட்டணி கட்சியே வலியுறுத்தும் நிலைமை.!

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது … Read more

தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தலை கிடைக்காத நிலையில் மரபணு சோதனை செய்து 2 மாதங்களுக்கு பின்னர் தலையற்ற சடலத்தின் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  சென்னை மணலி வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி, திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வந்த இவரை காதலி தமீம் பானுவும் , அவரது சகோதர் வாஷிம் பாஷாவும் சேர்ந்து கொலை செய்து உடல்பாகங்களை துண்டு துண்டாக்கியதாக கைது செய்யப்பட்டனர். அடையாறு … Read more