தூள் கிளப்பிய டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ்.. ஏமாற்றம் தந்த எல்ஐசி, ஹெச்யுஎல்..!

டாப் 10 சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் மதிப்பு 1,91,622.95 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் நிறுவனங்களாக உள்ளன. 30 நிறுவனங்கள் அடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 1498.02 புள்ளிகள் அல்லது 2.67% ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஏற்றத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவந்த்தின் பங்கு விலையானது, 57,673.19 கோடி ரூபாய் அதிகரித்து,4,36,447.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் … Read more

சென்னையில் மீண்டும் ஒழுகிய ஆவின் பால் பாக்கெட்டுகள்!

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் கடந்த வியாழக்கிழமை ஆவின் பால் விநியோகஸ்தர் 300 லிட்டர் (ஆரஞ்சு) பால் பாக்கெட்டுகளை மாதாவரம் பால் பண்ணையில் இருந்து வாங்கியிருந்தார். இந்த 300 லிட்டர பால் பாக்கெட்டுகளில் சில பாக்கெட்டுகள் உடைந்துபோய் காணப்பட்டன. இதனால் சில பாக்கெட்டுகளில் இருந்த பால் கசிந்து வீணானது.இது குறித்து பேசிய தமிழ்நாடு பால் முகவர் சங்கத் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி, “இது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதனால் பால் முகவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு பால்முகவர் 300 … Read more

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் … Read more

புதுக்கோட்டை தேர் விபத்து | துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்: அறநிலையத்துறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் அனிதா கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சப்பரங்களில் வைத்திருந்த சுவாமி … Read more

ரூ.1034 கோடி ஊழல் | அமலாக்கத்துறை தடுப்புக் காவலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்

மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஏற்கெனவே கடந்த ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று (ஜூலை 31) அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணையுடன் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 7 மணிக்கு விசாரணையை … Read more

ரணிலின் சதுரங்க ஆட்டம்: விழித்தெழ வேண்டிய தமிழ் மக்கள்

“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப் போல ஒரு குழுச்செயற்பாடு. மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும். நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அது ரகர் விளையாட்டைப் போல கடினமானது, குத்துச்சண்டையைப் போல, ரத்த விளையாட்டு.”இது ரணில் விக்ரமசிங்க கூறியது. அவர் சதுரங்கம் விளையாடுவது போன்ற ஒரு காணொளியின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார். இந்த வசனங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தது தமிழ் ஊடக முதலாளியான ராஜமகேந்திரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்கள் குப்தா, சாரின், ஹரிகிருஷ்ணா வெற்றி!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்றில் இந்திய ஏ அணியில் போட்டியின் 30-வது நகர்வில் கிரீஸ் வீரர் டிமிட்ரோயிசை இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்திய பி அணியில் விளையாடிய சரின் நிகில், சுவிஸ் வீரர் செபாஸ்டியனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். மேலும் இந்திய சி அணியில் விளையாடிய அஜித் குப்தா ஐஸ்லாந்து அணி வீரர் குட்முன்டுரை 36-வது நகர்வில் வீழ்த்தினார்.

புது மதுபான கொள்கையை கைவிட்டதால் டெல்லியில் சரக்கு வாங்க குவிந்த குடிமகன்கள்

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கியது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த போதும், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதியான இன்றோடு புது மதுக் கொள்கை முடிவுக்கு வருகிறது. நாளை (ஆகஸ்ட் 1) முதல் மதுபானத்திற்கு … Read more

'முதலீடுகளையும், வேலைவாய்ப்பையும் கெடுக்க வேண்டாம்'-இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுத்திடும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஈடுபட வேண்டாம் என தமிழக தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்’ சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேதாந்தா … Read more

கடும் மன உளைச்சல்! 63 நாணயங்களை விழுங்கிய ராஜஸ்தான் வாலிபர்- மருத்துவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த வாலிபரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நகரிலுள்ள சௌபாஸ்னி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் 36 வயதான வாலிபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கண்டறிய இளைஞருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் அவரது வயிற்றில் நாணயங்களின் குவியலை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்தத்தில் இருந்த போது 10-15 நாணயங்களை உட்கொண்டு விட்டதாக … Read more