”பொன்னி நதி பாக்கணுமே..பொழுதுக்குள்ள!” ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது “பொன்னி நதி” பாடல்!

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஆயிரம் ஆண்டுகளுக்கு சோழ இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்ட வரலாற்று நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு … Read more

பென்சன் வாங்குபவர்கள் வாழ்நாள் சான்றை சமர்பிக்க புதிய வசதி: இ.பி.எப்.ஓ., அறிமுகம்| Dinamalar

புதுடில்லி: பென்சன் வாங்குபவர்கள், எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக முகம் பதிவு செய்தல் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பென்சன் வாங்கும் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். இதனை செய்தால் தான் பென்சன் தொடர்ந்து கிடைக்கும். பென்சன் வாங்கும் முதியவர்கள், அலைச்சலை தவிர்க்கும் வகையிலும், வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்கும் வகையிலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு இபிஎப்ஓ நிறுவனம் அறிமுகம் … Read more

விஜய்யின் வாரிசு படம் குறித்து சரத்குமார் கொடுத்த அப்டேட்

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. மேலும் இந்த வாரிசு படம் பேமிலி சென்டிமென்ட் கதையில் உருவாகி வருவதாக ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகி … Read more

சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரகுராம் ராஜன்

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5-வது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த நாட்டில் தாராளமய ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது, அது உண்மையில் இந்திய வளர்ச்சிக்கு அவசியமா?ஆம், நமது எதிர்காலம் நமது தாராளவாத … Read more

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த … Read more

பலூசிஸ்தானில் கால்பந்து போட்டியில் எறிகுண்டு தாக்குதல்; 3 பேர் காயம்

குவெட்டா, பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பலூசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் விமான நிலைய சாலையில் அமைந்த துர்பத் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி ஒன்று நேற்று நடந்து கொண்டு இருந்தது. இதில், வீரர்களின் விளையாட்டை காண ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், திடீரென கால்பந்து போட்டி நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே வெடிசத்தம் கேட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், எறிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது என … Read more

Chess Olympiad: "பிறந்தது இங்கேதான். வீட்ல தமிழ்தான்!" கேமேன் தீவுகள் போட்டியாளார் லயா சுவாமிநாதன்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடந்துவருகிறது. மூன்றாம் நாளான இன்றும், இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனிடையே, வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் வீரர்களின் பெயர்களைப் படித்ததில் கண்ணில் பட்டது லயா சுவாமிநாதன் என்கிற பெயர். கேமேன் தீவுகள் சார்பாக ஓப்பன் பிரிவில் விளையாடும் லயா சுவாமிநாதனுக்கு இன்று ஓய்வு நாள். அவரிடம் பேசியதிலிருந்து… லயா சுவாமிநாதன் | Laia Swaminathan எத்தனை வருஷம் இந்தியாவுல இருந்திருக்கீங்க? “பிறந்ததுல அஞ்சு வயசு வரைக்கும் … Read more

'செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி போஸ்டர் விவகாரம் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம்' – சீமான்

சென்னை: “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா? எதிரியாக இருந்தாலும் வரசொல்லிவிட்டால் பண்பாட்டோடு நடத்தி அனுப்பியிருக்க வேண்டும்,அதுதான் முறை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை மீறி TANTRANSCO ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் … Read more

"மதத்தின் பெயரால் மோதல்" – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு ..!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மதநல்லிணக்கம் பேணுவதற்காக மதநல்லிணக்க சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளார். டெல்லியில் நேற்று சூபி மதகுருக்களுடன் சர்வமத நல்லிணக்க சந்திப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்தினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான பிரதமர் மோடியின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசுகையில் கூறியதாவது: சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், … Read more

உலகையே அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை.!

பணவீக்கம், அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக உலகம் முழுவதும் விரைவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையில், தனிநபர்கள் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான 8 வகையான  வழிகளை பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது வருமானத்துக்கும் செலவுக்குமான வரவுசெலவு அறிக்கையை தயாரித்து, தேவையற்ற செலவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வேலைஇழப்பு காலத்திலும், ஊதிய குறைப்பை சமாளிக்கும் வகையில் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் 3 மாத ஊதியத்தை வைத்திருக்க … Read more