டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக காவல் துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து கடத்தல் பயணியை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1,034 கோடி நிலமோசடி வழக்கு: சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கைது.! அமலாக்கத்துறை அதிரடி

மும்பை: 9 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் ராவத், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு … Read more

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரின் மனைவி ஆக்னஸ்மேரி (85). இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிஸ்லாஸ் உயிரிழந்து விட்டதால் ஆக்னஸ்மேரி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டின் மேல்மாடி வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்த ஆக்னஸ்மேரி வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை ஒன்றை … Read more

யூடியூப் பார்த்து 12 வயது சிறுவன் தயாரித்த ஒயினை குடித்த நண்பன் மருத்துவமனையில் அனுமதி!

கேரளாவில் யூ டியூப் பார்த்து சிறுவன் தயாரித்த ஒயினை குடித்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மாநில அரசு பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன், வீட்டிலிருந்த திராட்சைகளை கொண்டு, யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்துள்ளார். பாட்டிலில் திராட்சைகளை அடைத்து ஒயின் தயாரித்து அதனை மண்ணில் புதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை எடுத்து தனது நண்பனுக்கு சிறுவன் குடிக்க கொடுத்துள்ளான். அதைக் குடித்த சிறுவனுக்கு வாந்தியும், உடல் சோர்வும் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுதொடர்பாக தானாக … Read more

6 மாநிலங்களில் என்ஐஏ சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்படுவது குறித்து 6 மாநிலங்களில் உள்ள 13 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ம.பி., குஜராத், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் உ.பி., மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. ம.பி.,யில் போபால் மற்றும் ரைசன் மாவட்டங்களிலும், குஜராத்தில் பரூச், சூரத் , நவ்சரி மற்றும் ஆமதாபாத் மாவட்டங்களிலும், பீஹாரில் அராரியா மாவட்டத்திலும், … Read more

கிளாடியேட்டர் கெட்டப்பில் அக்ஷய் கமல்! வைரலாகும் பழைய புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல் முதன் முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் தான் அறிமுகமானார். ஹரீஸ் என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமானதால் ரசிகர்களால் அவரை ஹரீஸ் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ரெட்டை ரோஜா' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். வொர்க்-அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அக்ஷய் கமல் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இதனை … Read more

நடிகை வீட்டில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது இல்லை – முன்னாள் மந்திரி பார்த்தா சட்டர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின. இதற்கிடையே, அமலாக்க துறையின் காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக கொல்கத்தா தெற்கு புறநகரில் உள்ள ஜோகாவில் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தொடங்கியது

மாமல்லபுரம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா … Read more

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றாரா? பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக்கொன்றது. சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசாமா பின்லேடனினின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இ சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை … Read more