மதுரை: மாற்றுத் திறனாளிகளை தி லெஜெண்ட் படத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் நிறவனம்

மதுரையில் தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத் திறனளிகளை தனியார் உணவுப்பொருள் நிறுவனத்தினர் அழைத்துச் சென்றனர். பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணா அருள் ‘தி லெஜெண்ட்’ என்ற தமிழ் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், மதுரையைச் … Read more

நில மோசடி வழக்கு: சஞ்சய் ராவத் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, ரூ.1,034 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே … Read more

ரூசோ பிரதர்ஸ்-க்கு நன்றி தெரிவித்த ராஜமவுலி

இந்தியத் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைக் கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பல திரைப்படக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'த கிரே மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சமீபத்தில் மும்பை வந்திருந்தனர். அப்போது அவர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து ரூசோ பிரதர்ஸ், “சிறப்பு வாய்ந்த ராஜமவுலியை சந்தித்தது பெருமை” என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து … Read more

ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் பில்லாவர் கிராமத்தில் இன்று பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் உயிரிழப்புக்கு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பில்லாவரில் வீடு இடிந்து விழுந்து அப்பாவி உயிர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் துயரமானது. இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு … Read more

காமன்வெல்த் போட்டி : இந்திய ஆக்கி அணி வீராங்கனை நவ்ஜோத் கௌர்-க்கு கொரோனா

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்திய ஆக்கி மகளிர் அணி 2 போட்டியில் விளையாடி 2 ல் வெற்றி பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்திய ஆக்கி வீராங்கனை நவ்ஜோத் கௌர்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.இதனால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக இந்திய ஆக்கி அணியில் … Read more

பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி; அமெரிக்க உதவியை நாடியது

லாகூர், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று … Read more

வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் வரை ஏற்றுமதி செய்யும் மீனாட்சி!

மகாராஷ்டிராவை சேர்ந்த மீனாட்சி வால்கே, மூங்கில் பெண்மணி என பாசமாக அழைக்கப்படுகிறார். மற்ற பெண்களை போல ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக இருந்த மீனாட்சி, 4 ஆண்டுகளுக்கு பிறகு அபிசார் இன்னோவேட்டிவ்ஸ் என்ற கைவினை பொருட்கள் தொழிலைத் தொடங்கினார். இதன் மூலம் கூடைகள், தட்டுகள், நகைகள் மற்றும் விளக்குகள் போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றார். தனது வீட்டில் இருந்து ஆரம்பித்த வணிகத்தினை இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்து வருகின்றார். ஏற்றுமதியும் செய்து வருகின்றார். கார்ப்பரேட் வேலையை … Read more

தமிழ்நாடு காவல்துறைக்கு மிக உயரிய `ஜனாதிபதி சிறப்புக் கொடி' – வெங்கைய நாயுடு வழங்கினார்!

தமிழ்நாடு காவல்துறையை கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் விழா, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கொடியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழங்கப்பட அணிவகுப்பு மரியாதையைத் துணை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி சிறப்புக் கொடி வழங்கும் விழா பின்னர், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கொடுத்த `ஜனாதிபதியின் சிறப்புக் கொடி’யை, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். … Read more

வானிலை முன்னறிவிப்பு |  5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஜூலை 31) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய … Read more

வாஞ்சிநாதன் குறித்து மோடி பேச்சு – என்ன பேசினார் தெரியுமா?

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் ரேடியோவில் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். இந்த மாத மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் இன்று உரையாற்றினார். அதில் பேசிய பிரதமர் மோடி “நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட … Read more