பண மோசடி வழக்கு: நேரில் ஆஜராகும்படி பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பண மோசடி குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹம்ஸா ஷெரீஃப் ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன்கள் ஹம்ஸா, சுலைமான் ஆகியோா் சுமாா் 1,600 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த 2020 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை ஆணையம் வழக்கு பதிவு செய்து … Read more

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்.! பிரதமர் மோடி வேண்டுகோள்.!

நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ரயில் நிலையங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மனத்தின் குரல் என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய நாட்களில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்த நாள் ஆகஸ்டு … Read more

புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டையில் கோகர்னேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தோரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது, தேரின் அச்சு முறிந்து தேர் சாய்ந்து விப்துக்குள்ளானது. இதில் இந்த திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் 5 பேர் காயமடைந்தனர்.

தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம்: இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கைது

மும்பை: மும்பையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை அடிப்படையில் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

செங்கல்பட்டு: பாலாற்றில் குளித்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்றில் குளித்த இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும் அவர்களது நண்பர் சீனுவாசன் ஆகியோர் குடும்பத்தோடு மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு நேற்றிரவு சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சதீஷின் மகள் வேதஸ்ரீ (11) மற்றும் குமரேசனின் மகள் சிவசங்கரி (15) ஆகியோர் செங்கல்பட்டு மாமண்டூர் … Read more

மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்!

சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முன்னதாக இவர் இயக்கியிருந்த 'கோலங்கள்' சீரியல் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே கான்செப்ட்டில் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை இயக்கி வருகிறார். இல்லத்தரசிகளை தாண்டி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கில் 'உப்பென்னா' என்ற பெயரிலும் மலையாளத்தில் 'கனல்பூவு' என்ற ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், மிக … Read more

மராட்டியம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து எங்களிடம் வரக்கூடாது – ஏக்நாத் ஷிண்டே

மும்பை, நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக … Read more

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 3வது நாள் போட்டி அட்டவணை, நேரம் – முழு விவரம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. இந்த தொடரில் இந்தியாவின் 3வது நாள் அட்டவணை (ஜூலை 31 ) பின்வருமாறு :-(இந்திய நேரப்படி ) லாவ்ன் பவுல்ஸ் போட்டி: (பிற்பகல் … Read more

எரிகற்கள் மழையா…? ஆச்சரியம் அடைந்த மக்கள்; வைரலான வீடியோ

நியூயார்க், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வானில் எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால், அது சீன ராக்கெட்டின் மீதமுள்ள கழிவுகள் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி சீன விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 23 டன் எடை கொண்ட, மார்ச்-5பி ஒய் 3 என்ற ராக்கெட் கடந்த 24ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது. சீன ராக்கெட்டின் கழிவுகள், இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. அவை, … Read more