2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கம்

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கத்தை திலங்க இசுரு குமார பெற்றுக்கொடுத்துள்ளார். ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில்  55 கிலோ எடைப்பிரிவிலேயே இசுரு குமார வெண்கல பதக்கத்தை பெற்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும். இங்கிலாந்து பர்மிங்காமில் ‘2022கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்’ வியாழக்கிழமை (28) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. இப் போட்டிகள் ஆகஸ்ட் 8வரை நடைபெறவுள்ளது. பர்மிங்காம் அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப விழா பல சிறப்பம்சங்கள … Read more

செஸ் ஒலிம்பியாட்: 3 மாதங்களில் சாதித்த தமிழ்நாடு அரசு… பின்னணியில் இருந்தவர்கள் யார்?!

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கிய 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகின்றன. செஸ் ஒலிம்பியாட் – ஆய்வு பணியில் முதல்வர் இந்த விழாவுக்காகச் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை … Read more

அரசுப் பள்ளிகளில் நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவா?

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் (ஆகஸ்ட் 1), தங்களது வருகைப்பதிவை கல்வித்துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், மாணவர்களின் வருகையையும் செயலி மூலமே பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் … Read more

கோவிட் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டால் இலவச சோலே பட்டூரே: சண்டிகர் தெருவோர வியாபாரி தாராளம்

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடையில் இலவசமாக சோலே பட்டூரே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் சண்டிகரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர். இவர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இலவசமாக சோலே பட்டூரே வழங்கி பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சஞ்சய் ராணா சிங் ஜியின் கடையில் சோலே பட்டூரே சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்த … Read more

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும், அற்புதமான, வரலாற்று தருணத்தை காணப் போகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு 24 மாநிலங்களில், 75 முக்கிய ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது என்று தெரிவித்தார்.

டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவல் பதக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது

ரான்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சார், ராஜேஸ், கொங்காரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் நேற்று 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக ரூ.2.5. கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாட்டிலேயே அதிக நன்கொடை பெறும் இரண்டாவது மாநில கட்சி திமுக!.. எத்தனை கோடிகள் தெரியுமா?

நாட்டிலேயே அதிகபட்ச நன்கொடை பெறும் மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் அந்தந்த கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை தகவல் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம்ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில கட்சிகளில் பீகாரைச் சேர்ந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அந்த ஆண்டில், 60 கோடியே 15 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 58 கார்ப்ரேட் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து 59 கோடியே 24 … Read more

நடிகை வீட்டில் சிக்கிய பணம் யாருக்கு சொந்தம்?: மாஜி அமைச்சர் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா : தனது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சிக்கிய ரூ.50 கோடி பணம் தன்னுடையது அல்ல என மே.வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில், ஆசிரியர் நியமன ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது தோழியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அர்பிதாவின் வீட்டில் நடந்த சோதனையில், 50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல … Read more

கமல்ஹாசனை 'மருதநாயகம்' எடுக்கச் சொல்லும் அல்போன்ஸ் புத்ரன்

'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மலையாள இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன். அடிக்கடி தமிழ்ப் படங்களைப் பற்றியும் தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார். சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு திரைப்படக் கல்லூரியை ஆரம்பித்து அதில் தினமும் 45 நிமிடங்களாவது வகுப்புகள் எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இன்று கமல்ஹாசன், நின்று போன 'மருதநாயகம்' படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “கமல்ஹாசன் சார், … Read more