கார்ப்பரேட் வேலையை விட எங்களுக்கு இது தான் பெஸ்ட்.. 5 எம்பிஏ பட்டதாரிகள் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனாவின் வருகைக்கு பிறகு சொந்த தொழில் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிக அதிகரித்துள்ளது. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் கூட தங்களது வேலையினை துறந்து, சொந்தமாக தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி 5 எம்பிஏ பட்டதாரிகள் தாங்கள் அதிக சம்பளத்தில் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு, தங்களுக்கு பிடித்தமான தொழில் ஈடுபட்டுள்ளனர். அப்படி என்ன தொழில்? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையை … Read more

துவிச்சக்கர வண்டிகளுக்கான, பிரத்தியேக ஒழுங்கை கொழும்பில் ஆரம்பம்

தற்போதைய எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால், துவிச்சக்கரவண்டிகளின் பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பிரத்தியேக ஒழுங்கை  முன்னோடித் திட்டத்தை கொழும்பு நகரசபை முன்னெடுத்துள்ளது. 29 ஆம் திகதி கொழும்பு வங்கி அவென்யூவுக்கு எதிரே இந்த முன்னோடித் திட்டத்தை கொழும்பு மாநகர முதல்வர் திருமதி.ரோஸி சேனாநாயக்க ஆரம்பித்துவைத்தார் வங்கி மாவத்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேக ஒழுங்கை  ஒதுக்கப்பட்டுள்ளதுடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன வங்கி அவென்யூ முன்னோடித் திட்டத்திற்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் … Read more

லுலு மால் முதல் கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபர் வரை; யார் இந்த யூசுஃபலி?

Shaju Philip , Liz Mathew  UAE-based Yusuffali, one of Kerala’s richest entrepreneurs and the man behind Lucknow’s Lulu Mall: ஜூலை மாத பகலில், 42 வயதான ஆமினா மற்றும் அவரது சகோதரி 50 வயதான மைமூனா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகாவில் உள்ள முஹ்யுதீன் ஜும்ஆ மஸ்ஜித் முன், மனுக்களுடன் காத்திருந்தனர். மலப்புரத்தில் இருந்து வந்து, தங்கள் நன்கொடையாளரைச் சந்திக்க காத்திருந்தனர். “வீடு கட்ட பணம் வேண்டும்; என் சகோதரி தனது … Read more

ம.பி: மருத்துவக் கல்லூரியில் `ராகிங்' கொடூரம்… வைரலான வீடியோ – வழக்கு பதிவுசெய்த காவல்துறை

மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒன்றில் சீனியர் மாணவர்கள் சிலர் தங்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வீடியோவில், அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்களின் ஜுனியர் மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து அவர்களின் கன்னங்களில் அறைகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கும் போது அமைதியாக தலையை குனிந்து தரையை வெறித்துப் பார்க்கிறார்கள். … Read more

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம், பொதுமக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று (ஜூலை31) நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மிகவும் பழமையான பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமையான, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலானது கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், … Read more

உக்ரைன் தேடும் அதிபயங்கர போர் குற்றவாளி: வெளிவந்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள்!

உக்ரைனிய படைகளால் அதிக முக்கியத்துவத்துடன் தேடப்படும் ரஷ்ய போர் குற்றவாளிகளில் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைன் தொடர்ந்து பல்வேறு போர் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைன் போரில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்ட காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய பிராந்தியமான கல்மிகியாவைச் சேர்ந்த 39 வயதான விளாடிமிர் புடின் லுஹான்ஸ்க் ஆயுதக் குழுவான Bryanka-SSSR உடன் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விசாவில் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து சென்னை போலீஸ் விளக்கம் கேட்டுள்ளது . மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கடந்த 24-ம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐஐடிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி … Read more

ஆசிரியர்கள் நியமனம் முறைகேடால் அவப்பெயர் அமைச்சரவை, கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்: மம்தா முடிவு

கொல்கத்தா: ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு வழக்கில் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான பார்தா சட்டர்ஜி கைதான நிலையில், அமைச்சரவையையும், கட்சியையும் மாற்றி அமைக்க மம்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக, அம்மாநில அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி, அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அர்பிதாவின் பல வீடுகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பல சோதனைகளில் … Read more

`நடிகை பாலியல் வழக்கில் மஞ்சு வாரியர் என்னை சிக்கவைத்துள்ளார்’- நடிகர் திலீப் புது புகார்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கவைத்ததாக, முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மீது நடிகர் திலீப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை திலீப் தாக்கல் செய்துள்ளார். அதில், மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினரின் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் வழக்கு புனையப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது … Read more