டில்லி போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா நியமனம்| Dinamalar
புதுடில்லி: டில்லி போலீஸ் கமிஷனராக, தமிழக ஐ.பி.எஸ்., கேடரை சேர்ந்த சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டில்லி போலீஸ் கமிஷனராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா பதவிக்காலம் இன்றுடன்(ஜூலை 31)முடிவடைகிறது. இதனையடுத்து புதிய கமிஷனராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை கமிஷனராக பதவியேற்க உள்ள அரோரா மறுஉத்தரவு வரும் வரை அந்த பதவியில் இருப்பார். 1989ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான சஞ்சய் அரோரா, இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இயக்குனராக உள்ளார். … Read more