மலையாள நடிகர் சரத் சந்திரன் தற்கொலை

கேரளாவின் கொச்சியில் வசித்த நடிகர் சரத் சந்திரன்,37, அவரது அறையில் இறந்து கிடந்தார். அவர் அருகே, 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அவர், சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.உயிரிழந்த சரத் சந்திரன், அங்கமாலி டைரிஸ், ஒரு மெக்ஸிகன் அபராதா உள்ளிட்ட பல மலையாளப் படங்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இரு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஜூலை 27ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என … Read more

Long March 5B: சீனாவின் விண்வெளி ராக்கெட் பூமியில் விழுந்து நொறுங்கும்

புதிதாக ஏவப்பட்ட சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5Bயின் சிதைபாடுகள் பூமிக்குள்மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் சிதைபாடுகளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கூறும் சீனா, பூமியில் உள்ள எவருக்கும் சிறிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.  சீனா டியூன்ஹி என்ற பெயரில் பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March … Read more

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்.!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது முதின்(32). இவர் நேற்று முன்தின இரவு தனது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது முகமது முதின் கார் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் குமார் (59) மற்றும் ஆட்டோவில் இருந்த பாபு (35) என்பவர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த … Read more

மின்துறை: “2.5 லட்சம் கோடி பாக்கி; மாநிலங்கள் விரைந்து செலுத்த வேண்டும்!" – பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைய காலகட்டத்தில், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில், எரிசக்தி துறையில் இருந்த பல குறைபாடுகளை நீக்கி, மின் துறையை பலப்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசாங்கம் நாட்டின் மின் துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றுவதற்கான முயற்சியை எடுத்தது. பிரதமர் மோடி நாட்டின் மின் … Read more

கோவை | புதிய சொத்து வரி விதிப்புக்கான அடிப்படை மதிப்பு நிர்ணயம்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கோவை: புதிய சொத்துவரி விதிப்புக்காக, மாநகரை (மாநகரில் உளள விரிவிதிப்பு இனங்களை) 4 மண்டலங்களாக பிரித்து மாநகராட்சியால் அடிப்படை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் 30 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வரிவிதிப்பு இனங்கள் உள்ளன. மாநகராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் முன்பு 5 வகைகளிலும், இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டட 40 வார்டுகளில் 11 வகைகளிலும் என மொத்தம் 16 வகைகளில் சொத்துவரி விதிக்கப்பட்டு … Read more

'என் உயிரே போனாலும் சிவசேனாவை விட்டு போக மாட்டேன்' – சஞ்சய் ரவுத்

அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், “என் உயிரே போனாலும் நான் சிவசேனாவை விட்டு போக மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று (ஞாயிறு) காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்று விசாரணையை ஆரம்பித்தனர். ஏற்கெனவே அவருக்கு ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர். இது குறித்து சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் … Read more

நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு – பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான பதிவேட்டில் வருகை பதிவேடு செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 19 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரியில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: அவினாஷ் பாண்டே

ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே சஸ்பெண்ட் செய்துள்ளார் . மேற்குவங்கத்தில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக ரூ.2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.